Published:Updated:

மருத்துவப் பரிசோதனையின்போது இளம்பெண் மருத்துவரைக் குத்திக் கொன்ற கைதி - கேரளாவில் அதிர்ச்சி!

கொலைசெய்யப்பட்ட இளம்பெண் மருத்துவர் வந்தனா தாஸ்
News
கொலைசெய்யப்பட்ட இளம்பெண் மருத்துவர் வந்தனா தாஸ்

மருத்துவப் பரிசோதனையின்போது இளம்பெண் மருத்துவரை, கைதி ஒருவர் குத்திக் கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:

மருத்துவப் பரிசோதனையின்போது இளம்பெண் மருத்துவரைக் குத்திக் கொன்ற கைதி - கேரளாவில் அதிர்ச்சி!

மருத்துவப் பரிசோதனையின்போது இளம்பெண் மருத்துவரை, கைதி ஒருவர் குத்திக் கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கொலைசெய்யப்பட்ட இளம்பெண் மருத்துவர் வந்தனா தாஸ்
News
கொலைசெய்யப்பட்ட இளம்பெண் மருத்துவர் வந்தனா தாஸ்

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை நெடும்பனை பகுதியிலுள்ள பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தவர் குடவட்டூர் பகுதியைச் சேர்ந்த சந்தீப் (42). மது போதைக்கு அடிமையான சந்தீப், ஆசிரியர் பணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், ஓர் அடிதடி வழக்கில் சிக்கிய சந்தீப்பை போலீஸார் நேற்று இரவு கைதுசெய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்பு மருத்துவப் பரிசோதனைக்காக இன்று அதிகாலை 4:30 மணியளவில் கொட்டாரக்கரை அரசு தாலுகா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தாலுகா மருத்துவமனையில் ஹவுஸ் சர்ஜனாக பணிபுரிந்துவந்த மருத்துவர் வந்தனா தாஸ் (22) மருத்துவப் பரிசோதனை செய்திருக்கிறார்.

கைதுசெய்யப்பட்ட சந்தீப்
கைதுசெய்யப்பட்ட சந்தீப்

அப்போது, திடீரென வன்முறையில் இறங்கிய சந்தீப் மருத்துவமனையிலிருந்த கத்திரியை எடுத்து மருத்துவர் வந்தனா தாஸின் கழுத்து, முகம் ஆகிய இடங்களில் குத்தினார். மேலும், அங்கிருந்த மருத்துவமனை காவலாளி, போலீஸார் உள்ளிட்டவர்களையும் குத்தியிருக்கிறார். இதற்கிடையே, அங்கிருந்தவர்கள் சந்தீப்பை மடக்கிப் பிடித்தனர். படுகாயமடைந்த மருத்துவர் வந்தனா தாஸை திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். இதற்கிடையே, அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கோட்டயம் குறுப்பந்தரைப் பகுதியைச் சேர்ந்த மோகன் தாஸின் ஒரே மகளான மருத்துவர் வந்தனா தாஸ் கொலைசெய்யப்பட்ட சம்பவம் உறவினர்களைச் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதற்கிடையே, மருத்துவமனையில் பணியிலிருந்த மருத்துவர் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், ''சந்தீப், போலீஸார் அழைத்துவந்த குற்றவாளிதான். போலீஸார் முன்னிலையில்தான் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. போலீஸாருக்கும் காயம் ஏற்படும் அளவுக்கு வைலெண்டாக அவர் செயல்பட்டிருக்கிறார்.

கொலைசெய்யப்பட்ட இளம் மருத்துவர் வந்தனா தாஸ்
கொலைசெய்யப்பட்ட இளம் மருத்துவர் வந்தனா தாஸ்

ஹவுஸ் சர்ஜனான அந்த இளம் மருத்துவர் இந்தச் சம்பவத்தால் மிகவும் பயந்ததாக, பிற மருத்துவர்கள் தெரிவித்தனர். அந்த மருத்துவமனை பாதுகாப்பு மிகுந்த பகுதிதான். பாதுகாப்பு மிகுந்த பகுதியில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. மருத்துவர்களின் பாதுகாப்புக்காக தற்போதிருக்கும் சட்டத்தை இன்னும் வலுப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதைச் சட்டத் திருத்தமாகக் கொண்டுவர தீர்மானித்திருக்கிறோம்" என்றார்.