Published:Updated:

கொடுத்த பணத்தைக் கேட்ட தோழி... கழுத்தை நெரித்து காட்டில் புதைத்த இளைஞர் - கேரளாவில் கொடூரம்!

கொலைசெய்யப்பட்ட ஆதிரா
News
கொலைசெய்யப்பட்ட ஆதிரா

ஆதிராவின் துப்பாட்டாவால் அவரின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்திருக்கிறார். பின்னர் அவரின் கழுத்தில் மிதித்து இறந்ததை உறுதிசெய்திருக்கிறார். தொடர்ந்து காட்டுப்பகுதியில் மண்ணைத் தோண்டி ஆதிராவின் உடலைப்போட்டு இலை, சருகுகளால் மூடியிருக்கிறார்.

Published:Updated:

கொடுத்த பணத்தைக் கேட்ட தோழி... கழுத்தை நெரித்து காட்டில் புதைத்த இளைஞர் - கேரளாவில் கொடூரம்!

ஆதிராவின் துப்பாட்டாவால் அவரின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்திருக்கிறார். பின்னர் அவரின் கழுத்தில் மிதித்து இறந்ததை உறுதிசெய்திருக்கிறார். தொடர்ந்து காட்டுப்பகுதியில் மண்ணைத் தோண்டி ஆதிராவின் உடலைப்போட்டு இலை, சருகுகளால் மூடியிருக்கிறார்.

கொலைசெய்யப்பட்ட ஆதிரா
News
கொலைசெய்யப்பட்ட ஆதிரா

கேரள மாநிலம், எர்ணாகுளம் அங்கமாலி பாறக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் சனல். அவரின் மனைவி ஆதிரா. அங்கமாலி பகுதியில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்துவந்தார் ஆதிரா. கடந்த ஏப்ரல் 29-ம் தேதி சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்குச் செல்வதற்காக பைக்கில் ஆதிராவைப் பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டிருக்கிறார் அவரின் கணவர் சனல். அதன் பிறகு ஆதிரா வீடு திரும்பவில்லை. திடீரெனக் காணாமல்போன மனைவி குறித்து சனல் போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் விசாரணை நடத்தியதில், ஆதிராவுடன் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்துவந்த அகில் என்ற இளைஞர்மீது சந்தேகம் ஏற்பட்டது.

கைதுசெய்யப்பட்ட அகில்
கைதுசெய்யப்பட்ட அகில்

அகிலிடம் விசாரணை நடத்தியதில், ஆதிராவை அதிரப்பள்ளி காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலைசெய்து, சருகுகள் உள்ளிட்டவைகொண்டு மூடிவைத்தது தெரியவந்தது. காட்டுக்குள் சென்று உடலை மீட்ட போலீஸார், அகிலிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். அதில், அகிலும் ஆதிராவும் ஒரே சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்துவந்தபோது நட்பு ஏற்பட்டதாகவும், கடந்த ஆறு மாதங்களாக நட்புடன் பழகி வந்திருப்பதும் தெரியவந்தது. இந்த நிலையில் ஆதிராவிடம் பணம் கடன் வாங்கியிருக்கிறார் அகில். ஒருகட்டத்தில் ஆதிரா கடன் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டிருக்கிறார். ஆனால், பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் அகில் இழுத்தடித்திருக்கிறார். இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 29-ம் தேதி ஒரு காரை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து வெளியே போகலாம் என ஆதிராவைப் பாசமாக அழைத்திருக்கிறார். ஆதிரா அதற்குச் சம்மதித்ததைத் தொடர்ந்து அவரை அழைத்துக்கொண்டு அதிரப்பள்ளி காட்டுப்பகுதிக்குச் சென்றிருக்கிறார் அகில். அங்கு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த அகில், திடீரென ஆதிராவின் துப்பாட்டாவால் அவரது கழுத்தை இறுக்கிக் கொலைசெய்திருக்கிறார். பின்னர் அவரின் கழுத்தில் மிதித்து இறந்ததை உறுதிசெய்திருக்கிறார். தொடர்ந்து காட்டுப்பகுதியில் லேசாக மண்ணைத் தோண்டி, ஆதிராவின் உடலைப் போட்டு மண், இலை, சருகுகளால் மூடியிருக்கிறார். பின்னர் ஒன்றும் தெரியாதது போன்று காரில் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

ஆதிரா, அகில்
ஆதிரா, அகில்

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அகிலைக் கைதுசெய்த போலீஸார், அவரையும் அழைத்துக்கொண்டு நேற்று காட்டுப்பகுதிக்குச் சென்றனர். அங்கு, சருகுகள் மூடப்பட்ட நிலையில் ஆதிராவின் கால்கள் மட்டும் வெளியே தெரிந்திருக்கின்றன. ஆதிராவின் உடலை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக எர்ணாகுளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கழுத்து இறுக்கப்பட்டதால் மூச்சுத்திணறி ஆதிரா இறந்ததாக முதற்கட்ட போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் தெரியவந்திருக்கிறது. இதற்கிடையே ஆதிராவின் கழுத்தில் கிடந்த நகைகள் மாயமாகியிருப்பதும் தெரியவந்திருக்கிறது. ஆதிராவின் உடலிலிருந்து செயின் போன்றவற்றைத் திருடிய அகில் அங்கமாலியில் ஒரு தனியார் அடகுக்கடையில் நகையை வைத்திருப்பதாக விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் அகிலை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீஸார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.