Published:Updated:

”ஊழல் பண மழையில் கும்பகோணம் ஆர்.டி.ஓ அலுவலகம்!" - சர்ச்சையை ஏற்படுத்திய போஸ்டர்... நடந்தது என்ன?

ஆர்.டி.ஓ அலுவலகம் குறித்து ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்
News
ஆர்.டி.ஓ அலுவலகம் குறித்து ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்

கும்பகோணம் ஆர்.டி.ஓ அலுவலகம் ஊழல் பண மழையில் திளைப்பதாகவும், அங்கு அலுவலக உதவியாளராகப் பணிபுரிபவரின் ஒரு மாத வசூல் மட்டும் ரூ.5 லட்சம் எனவும் குறிப்பிட்டு, போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது.

Published:Updated:

”ஊழல் பண மழையில் கும்பகோணம் ஆர்.டி.ஓ அலுவலகம்!" - சர்ச்சையை ஏற்படுத்திய போஸ்டர்... நடந்தது என்ன?

கும்பகோணம் ஆர்.டி.ஓ அலுவலகம் ஊழல் பண மழையில் திளைப்பதாகவும், அங்கு அலுவலக உதவியாளராகப் பணிபுரிபவரின் ஒரு மாத வசூல் மட்டும் ரூ.5 லட்சம் எனவும் குறிப்பிட்டு, போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது.

ஆர்.டி.ஓ அலுவலகம் குறித்து ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்
News
ஆர்.டி.ஓ அலுவலகம் குறித்து ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்

கும்பகோணம் ஆர்.டி.ஓ அலுவலகம் ஊழல் பண மழையில் திளைப்பதாகவும், அங்கு அலுவலக உதவியாளராகப் பணிபுரிபவரின் ஒரு மாத வசூல் மட்டும் ரூ.5 லட்சம் எனவும் குறிப்பிட்டு, கும்கோணம் நகர்ப் பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

கும்பகோணம் ஆர்.டி.ஓ அலுவலகம் தனி ஆர்.டி.ஓ இல்லாமலேயே கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாகச் செயல்பட்டுவருகிறது. ஆய்வாளராக இருக்கும் செந்தாமரைதான் அனைத்தையும் கவனித்துக்கொண்டார். இந்த நிலையில், லைசென்ஸ் எடுப்பது தொடங்கி வாகனம் புதுபிப்பது வரை அனைத்துக்கும் லஞ்சம் வாங்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துவந்த நிலையில், தற்போது ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர் மூலம் அங்கு நடக்கும் லஞ்ச விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருப்பதாகச் சொல்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள்.

கும்பகோணம் பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்
கும்பகோணம் பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்

இது குறித்து சிலரிடம் பேசினோம். ``கும்பகோணத்தில் முக்கண்ணன் என்பவர் ஆர்.டி.ஓ-வாக இருந்தார். டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர்கள், இடைத்தரகர்கள் சேர்ந்து அலுவலகத்தில் வைத்தே அவருக்குக் கடவுளுக்கு இணையாக மாலை, மலர் கிரீடம் அணிவித்து பூக்களைத் தூவி, கடவுளுக்கு பூஜை செய்வதுபோல் பிரசித்திபெற்ற கோயில் ஒன்றின் குருக்களைவைத்து செய்தனர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் வேறு ஊருக்கு மாற்றப்பட்டார். பணம் கொடுத்தால் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் எதை வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்ற நிலை அப்போது இருந்ததாகச் சொல்லப்பட்டது. கிட்டத்தட்ட முக்கண்ணன் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டு ஒன்றரை வருடம் ஆகப்போகிறது. இதுவரை தனி ஆர்.டி.ஓ நியமனம் செய்யப்படவில்லை.

தஞ்சாவூர் உதவி ஆணையரான கருப்பசாமி இன்சார்ஜ் ஆர்.டி.ஓ-வாக இருந்து கவனித்துவந்தார். அவரும் தற்போது ஓய்வுபெற்றுவிட்டார். ஆய்வாளரான செந்தாமரையின் கட்டுப்பாட்டிலேயே அலுவலகம் செயல்பட்டது. கும்பகோணம் பெரும் வணிகப் பகுதியாக இருப்பதால், தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களிலிருந்தும் வாகனங்கள் வந்து செல்கின்றன. கும்கோணத்தில் தனியார் பஸ் உள்ளிட்ட வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.

கும்பகோணம்
கும்பகோணம்

வாகன உரிமையாளர்கள் காரியத்தைச் சாதித்துக்கொள்ள கரன்சியைக் கொடுத்தால் போதும் என்ற நிலையில்தான், ஆர்.டி.ஓ அலுவலகம் இயங்கிவருகிறது. எதற்கெடுத்தாலும் லஞ்சம் என்ற நிலை தொடர்கிறது. பணம் கொடுக்காமல் ஒரு லைசென்ஸ்கூட எடுக்க முடியாது, இடைத்தரகர்களின் கட்டுப்பாட்டில் ஊழியர்கள் இருந்தனர்.

டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர்கள், புரோக்கர்கள் உள்ளிட்ட அனைவரையும் கபிலன்தான் டீல் செய்வார். ஆர்.டி.ஓ அலுவலகம் என்றாலே லஞ்சம் என்ற நிலையில், கும்பகோணத்தில் எல்லை மீறி ஊழல் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இடைத்தரகர்களுக்கும் கபிலனுக்கும் பிரச்னை ஏற்பட்டதாகத் தெரிகிறது.

ஆர்.டி.ஓ அலுவலகத்தில் லஞ்சம் வாங்குவதாக ஒட்டப்பட்ட போஸ்டர்
ஆர்.டி.ஓ அலுவலகத்தில் லஞ்சம் வாங்குவதாக ஒட்டப்பட்ட போஸ்டர்

அலுவலக உதவியாளர் கபிலன் ஆய்வாளர் ரேஞ்சுக்கு நடந்துகொண்டிருக்கிறார். இது பலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில்தான், போஸ்டர் ஒட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆர்.டி.ஓ அலுவலகத்தில் வாங்கப்பட்ட லஞ்சத்தைப் பார்த்து மிரண்ட அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் தங்களுக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என கபிலன் மூலமாகக் கேட்டிருக்கின்றனர். முடியாது என அலுவலகத் தரப்பு மறுத்துவிட்டதாலும் போஸ்டர் ஒட்டியதாகப் பேசப்படுகிறது. லஞ்ச ஒழிப்பு போலீஸார் இந்த விவகாரத்தை கையில் எடுத்து விசாரணை மேற்கொள்கின்றனர்" என்றனர்.

இது குறித்து கபிலனிடம் பேசினோம். ``ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு வரும் நபர்களின் பெயர், செல் நம்பர், முகவரி, எதற்காக வருகிறார்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் நான் நோட்டில் எழுதி வாங்குவேன். சில மாதங்களுக்கு முன்பு இந்த நடைமுறையை நிறுத்திவிட்டோம். தற்போது மீண்டும் பின்பற்றத் தொடங்கியிருக்கிறோம். இதை நான்தான் ஆய்வாளர் செந்தாமரையிடம் சொல்லி செய்யவைத்ததாகச் சிலர் என்மீது கோபமடைந்தனர். அதன் பிறகே போஸ்டர் ஒட்டப்பட்டது" என்றார்.

ஆய்வாளர் செந்தாமரையிடம் பேசினோம். ``அலுவலகத்துக்கு வருபவர்களின் விவரங்கள் பெறப்பட்டது உண்மைதான். டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர்கள், இடைத்தரகர்களை அலுவலகத்துக்கு உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் அவர்களது தரப்பில் போஸ்டர் ஒட்டப்பட்டதாகத் தெரிகிறது. அதில் குறிப்பிட்டிருப்பதுபோல் யாரும் லஞ்சம் வாங்குவதில்லை" என்றார்.