Published:Updated:

விருதுநகர்: பட்டாசு ஆலையைத் தாக்கிய மின்னல்... வெடிகள் வெடித்து உடல் கருகி பலியான பெண்!

பெண் பலி
News
பெண் பலி ( சித்திரிப்புப் படம் )

விருதுநகர் அருகே செயல்பட்டுவரும் பட்டாசு ஆலைமீது மின்னல் தாக்கியதில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கிப் பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

Published:Updated:

விருதுநகர்: பட்டாசு ஆலையைத் தாக்கிய மின்னல்... வெடிகள் வெடித்து உடல் கருகி பலியான பெண்!

விருதுநகர் அருகே செயல்பட்டுவரும் பட்டாசு ஆலைமீது மின்னல் தாக்கியதில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கிப் பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

பெண் பலி
News
பெண் பலி ( சித்திரிப்புப் படம் )

விருதுநகர் அருகேயுள்ள வி.ராமலிங்காபுரத்தில் சிவகாசியைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கிவருகிறது. நாக்பூர் உரிமம் பெற்று இயங்கிவரும் இந்த பட்டாசு ஆலையில், 50-க்கும் மேற்பட்ட அறைகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர். இந்த நிலையில், இன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். பட்டாசு ஆலைத் தொழிலாளர்கள் ஒருசிலர், தயார்செய்யப்பட்ட பட்டாசுகளை அட்டைப்பெட்டியில் அடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

புஷ்பம்
புஷ்பம்

இந்த நிலையில் வி.ராமலிங்காபுரத்தில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்திருக்கிறது. அப்போது பயங்கர மின்னல் வெளிப்பட்டதில் பட்டாசுகளை அட்டைப்பெட்டியில் அடைக்கும் அறைமீது மின்னல் தாக்கி திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் அறை முழுவதும் வெடிச்சத்தத்துடன் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தின்போது அறையில் பணி செய்துகொண்டிருந்த மதுரை மாவட்டம், வாடியூரைச் சேர்ந்த புஷ்பம் (வயது 55) என்ற பெண் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்.

பாஜக தலைவர் மரணம்
பாஜக தலைவர் மரணம்

இது குறித்த தகவல் தீயணைப்பு நிலையத்துக்கும், வச்சக்காரப்பட்டி போலீஸுக்கும் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த தீயணைப்புத்துறையினர் விபத்து ஏற்பட்ட பட்டாசு அறையிலிருந்து மற்ற இடங்களுக்குத் தீ பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.