Published:Updated:

திருவள்ளூர்: சவுடு மண் அள்ள வந்த இடத்தில் மோதல்; லாரி டிரைவர் குத்திக் கொலை!

கொலை நடந்த இடம்
News
கொலை நடந்த இடம்

சவுடு மண் அள்ள வந்த இடத்தில் நடந்த மோதலில் லாரி டிரைவர் கொலைசெய்யப்பட்டார்.

Published:Updated:

திருவள்ளூர்: சவுடு மண் அள்ள வந்த இடத்தில் மோதல்; லாரி டிரைவர் குத்திக் கொலை!

சவுடு மண் அள்ள வந்த இடத்தில் நடந்த மோதலில் லாரி டிரைவர் கொலைசெய்யப்பட்டார்.

கொலை நடந்த இடம்
News
கொலை நடந்த இடம்

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், அக்கரப்பாக்கம் ஊராட்சியிலுள்ள ஏரியில் சவுடு மண் எடுக்கப்பட்டுவருகிறது. சவுடு மண் அள்ளுவதற்காக ஆத்துப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர்கள் பிரகாஷ் (31), சூர்யா(29) ஆகியோர் லாரியில் சென்றனர். பின்னர் மணல் ஏற்றிக்கொண்டு இருவரும் வெளியில் வந்தனர். அப்போது பிரகாஷுக்கும் சூர்யாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சூர்யா, லாரியில் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து பிரகாஷைச் சரமாரியாக வெட்டினார். அதைப் பார்த்தவர்கள் அலறிக்கொண்டு ஓட்டம்பிடித்தனர். இந்தச் சம்பவத்தில் பிரகாஷ் உயிரிழந்தார். இதையடுத்து சூர்யா தப்பி ஓடிவிட்டார்.

பிரகாஷ்
பிரகாஷ்

இது குறித்து தகவலறிந்ததும், சம்பவ இடத்துக்கு டி.எஸ்.பி கணேஷ்குமார் மற்றும் பெரியபாளையம் போலீஸார் வந்தனர். பிரகாஷின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிரகாஷ் கொலை குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இது குறித்து பெரியபாளையம் போலீஸார் நம்மிடம் பேசுகையில், ``கொலைசெய்யப்பட்ட பிரகாஷும் சூர்யாவும் நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். அதனால்தான் தன்னுடைய சொந்த ஊரான கிருஷ்ணாபுரம் கண்டிகையிலிருந்து ஆத்துப்பாக்கத்துக்கு சூர்யா குடிபெயர்ந்திருக்கிறார். இவர்கள் இருவரும் லாரி டிரைவர்கள்.

கொலை
கொலை

சவுடு மண் அள்ள லாரிகளில் வந்த இடத்தில்தான் சூர்யாவுக்கும் பிரகாஷுக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. கொலைசெய்யப்பட்ட பிரகாஷ் மீது ஏற்கெனவே ஒரு குற்ற வழக்கு நிலுவையில் இருக்கிறது. முன்விரோதம் காரணமாக பிரகாஷ் கொலைசெய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்திவருகிறோம். தலைமறைவாக இருக்கும் சூர்யா கைதுசெய்யப்பட்டால் மட்டுமே கொலைக்கான காரணம் தெரியவரும். அதனால் அவரைத் தேடிவருகிறோம்" என்றனர்.