Published:Updated:

சேலம்: தனியார் கல்லூரியில் மாணவர்களின் செல்போன்கள், பணம் திருட்டு! - போலீஸ் விசாரணை

சேலம்
News
சேலம்

பிராக்டிகல் அறையில் செல்போன்கள் அனுமதி இல்லாததால், மாணவர்கள் வகுப்பிலேயே தங்களது உடமைகளை வைத்துவிட்டுச் சென்றிருக்கின்றனர். தேர்வு முடிந்து வந்து பார்த்தபோது மாணவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

Published:Updated:

சேலம்: தனியார் கல்லூரியில் மாணவர்களின் செல்போன்கள், பணம் திருட்டு! - போலீஸ் விசாரணை

பிராக்டிகல் அறையில் செல்போன்கள் அனுமதி இல்லாததால், மாணவர்கள் வகுப்பிலேயே தங்களது உடமைகளை வைத்துவிட்டுச் சென்றிருக்கின்றனர். தேர்வு முடிந்து வந்து பார்த்தபோது மாணவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

சேலம்
News
சேலம்

சேலம், அம்மாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென்னை பைபாஸ் அருகே தனியார் கலை, அறிவியல் கல்லூரி ஒன்று அமைந்திருக்கிறது. இதில், கணினி அறிவியல் துறையில், இரண்டாம் ஆண்டில் 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களின் வகுப்பானது முதல் தளத்தில் அமைந்திருக்கிறது. இந்த நிலையில், கடந்த 10-ம் தேதி மாணவர்கள் பிராக்டிகல் தேர்வுக்காக காலை 10 மணியளவில் அதே முதல் தளத்திலுள்ள வகுப்பறைக்குச் சென்றிருக்கின்றனர்.

பிராக்டிகல் அறையில் செல்போன்கள் அனுமதி இல்லாததால், மாணவர்கள் வகுப்பிலேயே தங்களது உடமைகளை வைத்துவிட்டுச் சென்றிருக்கின்றனர். தேர்வு முடிந்து வந்து பார்த்தபோது மாணவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மாணவர்கள் தங்கள் பைகளில் வைத்துவிட்டுச் சென்றிருந்த பணம், செல்போன்கள் மாயமாகியிருந்தன.

சேலம்
சேலம்

18 விலையுயர்ந்த செல்போன்களும், மாணவர்கள் கல்லூரி கட்டணம் கட்டுவதற்காகக் கொண்டுவந்த 30,000 பணமும் திருடுபோயிருந்தது. இது குறித்து கல்லூரி முதல்வரைச் சந்தித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் புகாரளித்தபோது, அவர் சரியான விளக்கமோ, நடவடிக்கையோ எடுக்காமல் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும், `இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகாரளித்தால், மதிப்பெண்களில் கை வைத்துவிடுவோம்' என்று மாணவர்களை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

அதையடுத்து, தங்கள் பொருள், பணத்தை இழந்த மாணவர்கள் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் அன்றைய தினமே புகாரளித்திருக்கின்றனர். இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபோது, ``மாணவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையிடம் தெரிவித்திருக்கிறோம். அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்" எனக் கூறினர்.

காவல்துறை
காவல்துறை

மேலும் இது குறித்து அம்மாபேட்டை காவல் நிலைய ஆய்வாளர் கணேசனிடம் பேசியபோது, ``இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக மூன்று பேர் புகாரளித்திருக்கின்றனர். விசாரித்து வருகிறோம், உரிய நடவடிக்கை எடுப்போம்" என்றார்.