Published:Updated:

``வீட்டிலிருந்து நிறைய பணம் சம்பாதிக்கலாம்" ஆசையைத் தூண்டி மோசடி... தொடரும் சதுரங்க வேட்டை பாணி!

சைபர் க்ரைம் மோசடி

வேலை தேடிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணை தொடர்புகொண்ட மோசடிக் கும்பல் தாங்கள் அனுப்பும் யூடியூப் வீடியோக்களை லைக் செய்யும்போது அவர் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என்ற தூண்டிலைப் போட்டிருக்கிறது.

Published:Updated:

``வீட்டிலிருந்து நிறைய பணம் சம்பாதிக்கலாம்" ஆசையைத் தூண்டி மோசடி... தொடரும் சதுரங்க வேட்டை பாணி!

வேலை தேடிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணை தொடர்புகொண்ட மோசடிக் கும்பல் தாங்கள் அனுப்பும் யூடியூப் வீடியோக்களை லைக் செய்யும்போது அவர் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என்ற தூண்டிலைப் போட்டிருக்கிறது.

சைபர் க்ரைம் மோசடி

மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு வீட்டில் இருந்தபடியே எளிமையாகப் பணம் சம்பாதிக்க முடியும் என்று ஆசை காட்டி நூதன முறையில் ரூ.4.30 லட்சம் மோசடி செய்த ராஜஸ்தானைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட கும்பலை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சதுரங்க வேட்டை படத்தில் ஒரு காட்சி...
சதுரங்க வேட்டை படத்தில் ஒரு காட்சி...

வேலை தேடிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணை தொடர்பு கொண்ட மோசடிக் கும்பல் தாங்கள் அனுப்பும் யூடியூப் வீடியோக்களை லைக் செய்யும்போது அவர் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என்ற தூண்டிலைப் போட்டிருக்கிறது. அதை நம்பிய அந்தப் பெண் அந்தக் கும்பல் அனுப்பிய யூடியூப் சேனல்களை லைக் செய்து வந்திருக்கிறார். அவ்வாறு அவர் லைக் செய்யும் ஒவ்வொரு யூடியூப் வீடியோவுக்கும் 150 ரூபாய் வரவு வைக்கப்படும் என்று அந்தக் கும்பல் ஆசை காட்டி இருக்கிறது. முதலில் ஒரு சில வீடியோக்களை லைக் செய்ததற்காக ரூ.1,300 அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப் பட்டிருக்கிறது. மேலும், அந்தப் பெண்ணுக்கு 7,500 ரூபாய் விரைவில் வழங்கப்பட இருப்பதாகவும் அந்தப் பணத்தை பெறுவதற்கு கூடுதல் டெபாசிட் தொகை கட்ட வேண்டும் என்ற ஆசை காட்டி அந்தப் பெண்ணிடம் இருந்து பல தவணைகளில் 4.3 லட்சம் ரூபாயை அந்தக் கும்பல் ஏமாற்றி வாங்கியுள்ளது.

வீட்டிலிருந்து எளிமையாகப் பணம் சம்பாதிக்கலாம்..!

சதுரங்க வேட்டை திரைப்படத்தில் வருவது போன்று வீட்டிலிருந்து எளிமையாகப் பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டி, குறைந்த அளவு பணத்தை அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்கில் செலுத்தி அந்தக் கும்பல் ஏமாற்றியுள்ளது.

சதுரங்க வேட்டை
சதுரங்க வேட்டை

இவ்வாறு பல தவணைகளில் பணத்தை செலுத்திய அந்தப் பெண் பிறகு சுதாரித்துக்கொண்டு தான் கொடுத்த பணத்தை அந்தக் கும்பலிடம் திருப்பிக் கேட்டிருக்கிறார். ஆனால், அவர் இழந்த அந்தப் பணம் கிடைக்காத காரணத்தால் போலீஸாரின் உதவியை நாடி இருக்கிறார்.

பெண்ணின் புகாரை பெற்றுக்கொண்ட போலீஸார், பணம் அனுப்பப்பட்ட வங்கி விவரங்கள், அந்தப் பெண் தொடர்பு கொண்ட போன் நம்பரின் ஐபி அட்ரஸ் போன்ற விவரங்களை கொண்டு நான்கு பேர் கொண்ட அந்தக் கும்பலை தற்போது கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பியூஸ் சோனி, ராஜ்குமார் சோனி, அர்ஜுன் சோனி மற்றும் 17 வயது நிரம்பிய மற்றொரு நபர் ஆகியோரே இந்த வழக்கு தொடர்பாக போலீஸாரால் கைது செய்து செய்யப்பட்டு இருப்பவர்கள்.

24 வங்கிக் கணக்குகளில் பணம்..!

மோசடி செய்த அந்தக் கும்பல் பாதிக்கப்பட்ட பெண்ணைப் போன்று நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏமாற்றி இருப்பதை போலீஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அவர்களிடமிருந்து 30 மொபைல் போன்கள் மற்றும் சிம் கார்டுகளைக் கைப்பற்றி இருக்கிறார்கள். மேலும், அவர்களிடமிருந்து 24 வங்கிக் கணக்குகளில் இருந்த 97 லட்சம் ரூபாயை போலீஸார் தற்போது முடக்கி இருக்கிறார்கள்.

கைது
கைது

ஆன்லைன் மூலம் பல தரப்பட்ட மோசடிகள் நடைபெறுவது தொடர்ந்த வண்ணமே இருக்கிறது. நாட்டின் எந்த மூலையில் இருந்தும் மற்றொரு மூலையில் உள்ள நபரை சுலபமாக இதுபோன்ற மோசடிகளின் மூலம் ஏமாற்ற முடியும். மக்களின் அறியாமையே இந்த மோசடிக் கும்பலின் மூலதனம் ஆகும். இந்த மோசடிக் கும்பல்களில் இருந்து தற்காத்துக்கொள்வது அவரவர் கையில் மட்டுமே இருக்கிறது.