Published:Updated:

``சுந்தர்பிச்சை, எலான் மஸ்க் வர்றாங்க" ஸ்டார்ட் அப் பெயரில் பல கோடி மோசடி..!

நிதின் கட்கரியுடன் லுாக் தல்வார், அர்ஜுன் சௌத்ரி

பிரமாண்டமான முதலீட்டு திருவிழாவாகக் கூறப்பட்ட இந்த `ஸ்டார்ட் அப்' நிகழ்வுக்கு, கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் மற்றும் சர்வதேச முதலீட்டு நிறுவனங்களான சிகோயா, டைகர் குளோபல் ஆகியவையும் பங்கேற்பதாக விளம்பரங்கள் மூலம் தெரிவித்தனர்.

புது டெல்லியைச் சேர்ந்த முதலீட்டாளர்களாகக் கூறப்படும் லுாக் தல்வார், அர்ஜுன் சௌத்ரி இருவரும், `சர்வதேச ஸ்டார்ட் அப் மாநாடு' என்ற நிகழ்ச்சியை, உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் ஜனவரி 14 - 16 வரை நடத்துவதாக அறிவித்தனர். அதன் பின்னரே இந்த நிகழ்வை மார்ச் 24 – 26-க்கு மாற்றியமைத்தனர்.

'சர்வதேச ஸ்டார்ட் அப் மாநாடு' விளம்பரம்
'சர்வதேச ஸ்டார்ட் அப் மாநாடு' விளம்பரம்

இந்த ஸ்டார்ட்-அப் நிகழ்வுக்காகக் கொடுக்கப்பட்ட விளம்பரங்கள் அனைத்தும் வெறும் புரளியாகப் போனதால், கலந்துகொள்ள முன் பதிவு செய்த ஆயிரக்கணக்கான தொழில் முனைவோர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  

`ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்குத் தேவையான முதலீடுகளை பெற்றுத் தருகிறோம். அதற்காக நடத்தப்படும் உலகின் பிரமாண்ட முதலீட்டு திருவிழாதான் இது என்று கூறி மோசடி செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்வு வளரும் தொழில்முனைவோருக்கு நிதியுதவிக்காக சாத்தியமான முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறை நிபுணர்களுடன் இணைவதற்கு ஒரு தளத்தை வழங்கும் என்று கூறப்பட்டது.

'சர்வதேச ஸ்டார்ட் - அப் மாநாடு' விளம்பரம்
'சர்வதேச ஸ்டார்ட் - அப் மாநாடு' விளம்பரம்

பிரமாண்டமான முதலீட்டு திருவிழாவாகக் கூறப்பட்ட  இந்த  'ஸ்டார்ட் அப்' நிகழ்வுக்கு, கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் மற்றும் சர்வதேச முதலீட்டு நிறுவனங்களான சிகோயா, டைகர் குளோபல் ஆகியவையும் பங்கேற்பதாக விளம்பரங்கள் மூலம் தெரிவித்தனர்.

மேலும், இந்த நிகழ்வுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து ஆசி பெற்றதாகக் கூறி, அவரது படங்களை விளம்பர பேனர்களிலும், சமூக வலைதளங்களிலும் வெளியிட்டனர்.

இதனால் இவர்கள் மீது நம்பிக்கை கொண்டு ஏராளமான தொழில் முனைவோர்கள் முன்பதிவு செய்தனர். இந்த நிகழ்வில் பங்கேற்க ஒரு நபருக்கு கட்டணம் ரூபாய் 8,000 ஆகும். 2,000-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்தக் கட்டணத்தை செலுத்தி டிக்கெட் முன்பதிவு செய்தனர். இப்படி நிறுவனங்கள் மூலம் ஆயிரக்கணக்கானோர் டிக்கெட் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

``சுந்தர்பிச்சை, எலான் மஸ்க் வர்றாங்க" ஸ்டார்ட் அப் பெயரில்  பல கோடி மோசடி..!

மார்ச் மாதம் 24 - 26 வரை நொய்டாவில் இந்த மாநாடு நடந்தது. ஆனால், அவர்கள் வெளியிட்ட விளம்பரங்களில் குறிப்பிடப் பட்டவர்கள் ஒருவர்கூட மாநாட்டில் பங்கேற்கவில்லை. இது பங்கேற்ற அனைவருக்கும் பெரும் ஏமாற்றமாக இருந்தது.

இப்படி திட்டமிட்டு ஏமாற்றியதன் மூலம் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளதை உணர்ந்த இளம் தொழில்முனைவோர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த நூதன மோசடி குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.