Published:Updated:

`அது நான் பேசிய ஆடியோதான்; விரைவில் புதிய ஆடியோக்கள் வெளியாகும்!'- யுவராஜ் கருத்தால் பரபரப்பு

ஆடியோ வெளியிட இருக்கும்  யுவராஜ்
News
ஆடியோ வெளியிட இருக்கும் யுவராஜ்

திருச்சி சிறையில் இருக்கும் யுவராஜ், சமீபத்தில் டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு முடிந்தது குறித்து வெளியான ஆடியோ நான் பேசியதுதான். அதைப்போலவே நிறைய ஆடியோ உள்ளது என்கிறார் யுவராஜ்.

Published:Updated:

`அது நான் பேசிய ஆடியோதான்; விரைவில் புதிய ஆடியோக்கள் வெளியாகும்!'- யுவராஜ் கருத்தால் பரபரப்பு

திருச்சி சிறையில் இருக்கும் யுவராஜ், சமீபத்தில் டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு முடிந்தது குறித்து வெளியான ஆடியோ நான் பேசியதுதான். அதைப்போலவே நிறைய ஆடியோ உள்ளது என்கிறார் யுவராஜ்.

ஆடியோ வெளியிட இருக்கும்  யுவராஜ்
News
ஆடியோ வெளியிட இருக்கும் யுவராஜ்

பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான யுவராஜ், அவ்வப்போது டி.எஸ்.பி விஷ்ணுபிரியா மரணம் மற்றும் அரசியல் தலைவர்கள் குறித்து ஆடியோக்கள் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

ஆடியோ வெளியிட இருக்கும்  யுவராஜ்
ஆடியோ வெளியிட இருக்கும் யுவராஜ்

தற்போது திருச்சி மத்திய சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ள அவர், தனது அறையில் உள்ள கழிவுநீர்த் தொட்டியில் இரண்டு செல்போன், சிம் கார்டுகள் மற்றும் சார்ஜர் உள்ளிட்டவை வைத்திருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து, சிறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில், யுவராஜ் மீது திருச்சி கே.கே.நகர் காவல்நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், யுவராஜ் பேசும் ஆடியோ ஒன்று மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலானது.

அந்த ஆடியோவில், ``திருச்செங்கோடு போலீஸ் டி.எஸ்.பி விஷ்ணுபிரியாவின் தற்கொலை வழக்கை சி.பி.ஐ முறையாக விசாரிக்கவில்லை. என்னை விசாரிக்காமல் சி.பி.ஐ வழக்கை அவசரமாக முடித்துள்ளனர்.

இதுகுறித்து என்னிடம் விசாரித்திருந்தால், விஷ்ணுபிரியா தற்கொலை தொடர்பாகப் பல ஆதாரங்களைக் கொடுத்திருப்பேன். இந்த வழக்கில், உண்மையை வெளியே சொல்லிவிடுவேன் என்பதால் என்னைக் கொல்வதற்கு முயல்கிறார்கள்" எனக் கூறியிருந்தார்.

யுவராஜ்
யுவராஜ்

இந்நிலையில் யுவராஜ், திருச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2 நீதிபதியிடம் சிறைக்குள் செல்போன் வைத்தது தொடர்பாக, அவர் மீது தொடரப்பட்ட வழக்குக்கு எதிராக மனு ஒன்றை வழங்கினார்.

அந்த மனுவில், கடந்த மாதம் 14-ம் தேதி முதல் 19-ம் தேதி திருச்சி மத்திய சிறைச்சாலையில் பொறுப்பு அதிகாரியாகச் செயல்பட்ட திருச்சி பெண்கள் சிறைச்சாலையின் கண்காணிப்பாளர் ராஜலட்சுமி உத்தரவின் பேரில் சிறைக்காவலர்கள், தான் சிறைக்குள் செல்போன் வைத்திருந்ததாகச் சித்திரித்து பொய்யான குற்றச்சாட்டின் பேரில் என் மீது வழக்கு பதிவு செய்ய வைத்துள்ளனர்.

மேலும், சிறைத்துறை அதிகாரிகள், டி.எஸ்.பி விஷ்ணுபிரியா மரணம் குறித்த வழக்கில் சி.பி.ஐ விசாரணை முடிக்கப்பட்டது தொடர்பாக ஆடியோ வெளியிட்டதற்கும் எச்சரித்தனர். தொடர்ந்து, என் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சிறை அதிகாரிகள் மிரட்டினார்கள்.

தொடர்ந்து சிறை அதிகாரிகள், ``நாங்கள் செய்யும் சித்ரவதைகளால் நீயே தற்கொலை மூலம் உன் உயிரை மாய்த்துக்கொள்ளப் போகிறாய் என்றும், நீ உயிரோடு வெளியே போக முடியாது" என்றும் மிரட்டினார்கள். எனவே, திருச்சி பெண்கள் மத்திய சிறை கண்காணிப்பாளர் ராஜலட்சுமி, திருச்சி மத்திய சிறைச்சாலை முதல் தலைமைக் காவலர் ஜேசுதாஸ், சிறைத்துறை அதிகாரிகளான முருகானந்தம், மணிமுத்து, மில்டன் மற்றும் குமாரதாஸ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யும்படி 16 பக்க மனுவை யுவராஜ் நீதிபதியிடம் வழங்கினார்.

இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த யுவராஜிடம் பேசினோம். ``அந்த ஆடியோ நான் பேசியதுதான். சிறையில் உள்ள போனில் இருந்து என் நண்பரின் செல்போனுக்கு பேசிய ஆடியோ அது. விஷ்ணுபிரியா மரணத்துக்கு எஸ்.பி ஒருவர்தான் காரணம். இதுபோன்று நிறைய ஆடியோக்கள் உள்ளன. அந்த ஆடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகும். அநேகமாக வரும் ஞாயிறு அன்று புதிய ஆடியோ வெளியாகலாம்” என்றபடி கிளம்பினார்.