Published:Updated:

`மும்பை தாக்குதல் குற்றவாளி ராணாவை தூக்கிலிட வேண்டும்’ - துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இளம்பெண்

ராணா
News
ராணா

`பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதலை நேரில் பார்த்த மிகவும் குறைந்த வயது சாட்சி நான்தான். என் கண் முன்னே தீவிரவாதிகள் சுட்டு பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர். எனது வலது காலில் குண்டடி பட்டு காயம் அடைந்தேன். ராணாவை தூக்கிலிட வேண்டும்.’

Published:Updated:

`மும்பை தாக்குதல் குற்றவாளி ராணாவை தூக்கிலிட வேண்டும்’ - துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இளம்பெண்

`பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதலை நேரில் பார்த்த மிகவும் குறைந்த வயது சாட்சி நான்தான். என் கண் முன்னே தீவிரவாதிகள் சுட்டு பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர். எனது வலது காலில் குண்டடி பட்டு காயம் அடைந்தேன். ராணாவை தூக்கிலிட வேண்டும்.’

ராணா
News
ராணா

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தீவிரவாதத் தாக்குதலில் சி.எஸ்.டி. ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்கள் கடுமையாக சேதம் அடைந்தன. பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் கடல் வழியாக வந்து தென்மும்பையில் தாக்குதலில் ஈடுபட்டனர். இத்தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர்.

அஜ்மல் கசாப் என்ற ஒரு தீவிரவாதி மட்டும் உயிரோடு பிடிபட்டார். விசாரணைக்குப் பிறகு அவர் தூக்கிலிடப்பட்டார். இக்குண்டு வெடிப்பில் தொடர்புடைய தகவுர் ராணா தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். அவர் டேவிட் ஹெட்லியுடன் சேர்ந்து இத்தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தேவிகா
தேவிகா

ராணாவை இந்தியாவிற்குக் கொண்டு வர அமெரிக்காவின் கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பாக மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் கடந்த சில நாள்களுக்கு முன்பு ராணாவை இந்தியாவிற்கு நாடு கடத்த அனுமதி வழங்கியது. இதையடுத்து அவர் விரைவில் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் தீவிரவாதிகள் சி.எஸ்.டி ரயில் நிலையத்தில் தாக்குதல் நடத்தியபோது 9 வயதாக இருந்த தேவிகா நட்வர்லால் என்ற சிறுமி காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம் அடைந்தார். அவருக்கு இப்போது 23 வயதாகிறது. தேவிகா, தாக்குதல் நடந்த தினத்தை நினைவுகூர்ந்து, அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் ராணாவை தூக்கிலிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக தேவிகா அளித்த பேட்டியில், `பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதலை நேரில் பார்த்த மிகவும் குறைந்த வயதான சாட்சி நான்தான். என் கண் முன்னே தீவிரவாதிகள் சுட்டு பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர்.

ராணா
ராணா

எனது வலது காலில் குண்டடி பட்டு காயமடைந்தேன். இக்குண்டு வெடிப்பில் தொடர்புடைய ராணாவை நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றம் அனுமதி கொடுத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ராணாவை தூக்கிலிட வேண்டும். அல்லது கடுமையான தண்டனை கொடுத்தால் மகிழ்ச்சியடைவேன். அவனை இந்தியாவிற்கு கொண்டு வந்து சிறையில் அடைத்து வைப்பதால் எந்தப் பயனும் கிடையாது.

தீவிரவாத தாக்குதல் குறித்து கூடுதல் தகவல்களை அவனிடம் கேட்டுப்பெறவேண்டும். தாக்குதல் நடத்தவிருந்தது ராணாவிற்கு தெரியும். 10 தீவிரவாதிகள் நம் நகரத்திற்குள் வந்து தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். ராணாவிற்கு கொடுக்கப்படும் தண்டனையைப் பார்த்து இது போன்ற தீவிரவாத செயலில் ஈடுபட யாரும் முன் வரக்கூடாது’ என்று தெரிவித்தார்.