Published:Updated:

``என்னைக் கொல்ல, முன்னாள் கணவர் சிறையிலிருந்து சதி செய்கிறார்"- நடிகை ராக்கி சாவந்த் `பகீர்' புகார்

ராக்கி சாவந்த்
News
ராக்கி சாவந்த் ( Instagram Photo:// @rakhisawant2511 )

சிறையிலிருந்துகொண்டு தன்னைக் கொலைசெய்ய சதி செய்வதாக, நடிகர் ராக்கி சாவந்த் தன்னுடைய முன்னாள் கணவர்மீது குற்றம்சாட்டியிருக்கிறார்.

Published:Updated:

``என்னைக் கொல்ல, முன்னாள் கணவர் சிறையிலிருந்து சதி செய்கிறார்"- நடிகை ராக்கி சாவந்த் `பகீர்' புகார்

சிறையிலிருந்துகொண்டு தன்னைக் கொலைசெய்ய சதி செய்வதாக, நடிகர் ராக்கி சாவந்த் தன்னுடைய முன்னாள் கணவர்மீது குற்றம்சாட்டியிருக்கிறார்.

ராக்கி சாவந்த்
News
ராக்கி சாவந்த் ( Instagram Photo:// @rakhisawant2511 )

பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த், டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் அடில் கான் துரானி என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்காக தன்னை இஸ்லாமிய மதத்துக்கும் மாற்றிக்கொண்டார். ஆனால், அவர்கள் திருமண பந்தம் சில மாதங்கள்கூட நீடிக்கவில்லை. அடில் கான் தன்னிடமிருந்து நகை, பணத்தைத் திருடிக்கொண்டதாக மும்பை போலீஸில் ராக்கி சாவந்த் புகார் செய்திருக்கிறார். தற்போது வேறு ஒரு வழக்கில் அடில் கான் மைசூர் சிறையில் இருக்கிறார். ராக்கி சாவந்த் தற்போது தன்னுடைய முன்னாள் கணவர்மீது புதிய குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். அவர் இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் வீடியோவில், ``என்னைக் கொலைசெய்ய அடில் கான் சிறையில் திட்டமிடுவதாக எனக்குத் தெரியவந்திருக்கிறது.

``என்னைக் கொல்ல, முன்னாள் கணவர் சிறையிலிருந்து சதி செய்கிறார்"-  நடிகை ராக்கி சாவந்த் `பகீர்' புகார்

சிறையிலுள்ள கொலைகாரன் ஒருவனிடம் என்னைக் கொலை செய்வதற்கான பணியை அடில் கான் கொடுத்திருக்கிறார். விரோதிகளிடமிருந்து என்னைக் காப்பாற்றிக்கொள்ள குரான் படிக்கிறேன். அல்லா எனது பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வார். என்னை உன்னால் கொலைசெய்ய முடியாது. என்னை ஏன் கொலைசெய்ய விரும்புகிறாய்... பணத்துக்காகவா அல்லது பழிவாங்கா?” என்று கேட்டிருக்கிறார்.

அதோடு ராக்கி சாவந்த் தொலைபேசி உரையாடல் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார். அதில் மர்மநபர் ராக்கி சாவந்திடம், `அடில் கான் உங்களைக் கொலைசெய்ய திட்டமிடுகிறார்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். ``அடில் அறையில் சிலர் இருந்தனர். அவர்களுடன் உங்களை(ராக்கி) கொலைசெய்ய அடில் திட்டமிட்டுக்கொண்டிருந்தார். சிறிது நாள்களாக அடில் இது போன்ற காரியத்தில் ஈடுபட்டிருக்கிறார்” என்று தெரிவித்தார். உடனே ராக்கி சாவந்த் அந்த நபரிடம், ``நான் ரம்ஜானுக்கு நோன்பு இருந்தபோது அடில் கானை மன்னித்துவிட்டேன். என்னுடைய தாயாரைக் கொலை செய்தான்.

ராக்கி சாவந்த்
ராக்கி சாவந்த்

என்னை மோசடி செய்தான். எனது பணத்தை எடுத்துக்கொண்டான். அப்படி இருந்தும் அவனை மன்னித்துவிட்டேன். அனைத்தையும் அல்லாவிடம் விட்டுவிட்டேன். என்னைக் கொலைசெய்ய யாரிடம் வேலையை ஒப்படைத்திருக்கிறார்?” என்று கேட்டார். உடனே போனில் பேசிய நபர், ``கொலைகாரன் ஒருவரிடம் அந்த வேலையைக் கொடுத்திருக்கிறார். அதனால் பத்திரமாக இருங்கள்” என்று தெரிவித்தார். உடனே, ``அடில் தினமும் சிறையிலிருந்து என்னைத் தொடர்புகொண்டு பேசிக்கொண்டுதான் இருக்கிறார். என்னைக் காதலிப்பதாகவும் என்னைத் திரும்ப ஏற்றுக்கொள்ளும்படி கேட்கிறார். ஆனால், அவரை மன்னித்துவிட்டேன். ஆனால், என்னிடமிருந்து விலகி இருக்கும்படி கூறிவிட்டேன்” என்று ராக்கி சாவந்த் அந்தத் தொலைபேசி உரையாடலில் குறிப்பிட்டிருக்கிறார்.