Published:Updated:

நாமக்கல்: `சட்டவிரோத கருணைக்கொலை?’ - அதிர்ச்சித் தகவல் - போலி டாக்டர், பிணவறை உதவியாளரிடம் விசாரணை

மருந்து
News
மருந்து ( மாதிரிப் படம் )

மருத்துவ சிகிச்சை பலனின்றி இருக்கக்கூடிய முதியவர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து செலுத்தி கருணைக்கொலை செய்ததாகச் சொல்லப்படும் நபர்களிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Published:Updated:

நாமக்கல்: `சட்டவிரோத கருணைக்கொலை?’ - அதிர்ச்சித் தகவல் - போலி டாக்டர், பிணவறை உதவியாளரிடம் விசாரணை

மருத்துவ சிகிச்சை பலனின்றி இருக்கக்கூடிய முதியவர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து செலுத்தி கருணைக்கொலை செய்ததாகச் சொல்லப்படும் நபர்களிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

மருந்து
News
மருந்து ( மாதிரிப் படம் )

நாமக்கல், பள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவர் பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனை பிணவறையில் உதவியாளராகப் பணியாற்றிவருகிறார். இவருக்கும் மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றும் கோவிந்தன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் சேர்ந்து மருத்துவமனையில் கிடைக்கக்கூடிய மருந்துகளை யாருக்கும் தெரியாமல் எடுத்துச் சென்று தனியார் மெடிக்கலில் விற்பது போன்ற செயலில் ஈடுபட்டுவந்திருக்கின்றனர் எனப் புகார் எழுந்தது.

பிணவறை
பிணவறை
File Photo

பின்னர் மருத்துவமனையில் வயது முதிர்வின் காரணமாக சிகிச்சை பெற்றுவரும் முதியவர்களின் நிலையை அறிந்து அவர்களின் உறவினர்களிடம், ”ஏன் இப்படிக் கடைசி காலத்துல கஷ்டப்பட வைக்கிறீங்க. இதுக்கு ஒரு வழி இருக்கு. கொஞ்சம் செலவாகும்” என்றெல்லாம் கூறி, அவர்களின் உறவினர்களை மூளைச்சலவை செய்து, மருத்துவமனையிலிருந்து சிகிச்சை பெற்றுவரும் முதியவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு கூறுவார்களாம். பின்னர். இவர்கள் அந்த உடல்நலம் குன்றிய முதியவர்களுக்கு அவர்களின் உறவினர்களின் சம்மதத்துடன், மருத்துவமனையிலிருந்து கொண்டுசென்ற சிரஞ்சியில் வயலுக்குப் பயன்படுத்தக்கூடிய பூச்சிக்கொல்லி மருந்துகளை எடுத்து முதியோர்களுக்குச் செலுத்திவந்திருக்கின்றனர். இதைச் செலுத்திய பிறகு அரை மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட முதியவர்கள் இறந்தும் விடுகின்றனர். இதற்கு 5,000 ரூபாய் பணத்தைப் பெற்று வருவாய் ஈட்டிவந்திருக்கின்றனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.

இதேபோன்று பள்ளிப்பாளையம், அக்ரஹாரம் தெருவில் மருத்துவர் என்று சொல்லிக்கொண்டு கிளினிக் வைத்திருந்த அப்பாவு என்கிற நாகேஷும் பணத்துக்காக, உடல்நலம் குன்றி உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் முதியவர்களுக்கு தவறான மருந்தைச் செலுத்தி அவர்களை உயிரிழக்க வைக்கும் வேலையைச் செய்துவந்திருக்கிறாராம். இது தொடர்பான தகவல்கள் வெளிவரவே பள்ளிப்பாளையம் போலீஸார் சம்பந்தப்பட்டவர்களை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சேலத்திலுள்ள ஒரு தனியார் மெடிக்கலிலிருந்து சம்பந்தப்பட்ட போலி மருத்துவர், மருந்துகளை வாங்கியதாகத் தெரிவித்திருக்கிறார். அதன் மூலம் போலீஸார் மற்ற நபர்களிடமும் விசாரணை நடத்திவருகின்றனர்.

போலீஸ் விசாரணை
போலீஸ் விசாரணை

இது குறித்து திருச்செங்கோடு டி.எஸ்.பி மகாலட்சுமியிடம் பேசியபோது, ``சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து விசாரணை செய்து வருகின்றோம். விசாரணை நடைபெற்று வருவதால் எதுவும் வெளியில் தெரிவிக்க முடியாது" என்றார்.

மேலும், போலி மருத்துவர் பிடிபட்டிருப்பது குறித்து நாமக்கல் சுகாதார இணை இயக்குநர் ராஜ்மோகனிடம் பேசியபோது, "சம்பந்தப்பட்ட புகார் குறித்து நானும் கேட்டறிந்தேன். கோவிந்தன் என்பவர்தான் துப்புரவுப் பணியாளராக மருத்துவமனையில் பணியாற்றிவருகிறார். மோகன் எனும் நபர் எங்கள் மருத்துவமனையில் பணியாற்றியது கிடையாது. அதுவும் பிணவறை முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. சம்பந்தமில்லாத நபர்கள் உள்ளே வர வாய்ப்பே இல்லை. மேலும், பள்ளிப்பாளையம் அக்ரஹாரம் பகுதியில் போலி மருத்துவர் என்று ஒருவர் பிடிபட்டிருக்கிறார். இது குறித்து எங்களது மருத்துவ அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்" என்றார்.