Published:Updated:

``எங்க அம்மாவைப் பார்த்துக்க!" - ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் காவிரியில் குதித்து, தற்கொலை

இளைஞர் தற்கொலை
News
இளைஞர் தற்கொலை

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால், இளைஞர் ஒருவர் காவிரி ஆற்றில் குதித்து, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:

``எங்க அம்மாவைப் பார்த்துக்க!" - ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் காவிரியில் குதித்து, தற்கொலை

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால், இளைஞர் ஒருவர் காவிரி ஆற்றில் குதித்து, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இளைஞர் தற்கொலை
News
இளைஞர் தற்கொலை

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகேயுள்ள ஆண்டிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் நஷ்ரத் கான். இவர் மனைவி ஷாஜிதா. இந்தத் தம்பதிக்கு ரியாஸ் கான் என்ற மகன் இருந்தார். நஷ்ரத் கான் கேரள மாநிலத்தில் தங்கி திருமண தரகராகப் பணிபுரிந்துவருகிறார். ரியாஸ் கான் ஈரோட்டிலுள்ள தனியார் செல்போன் கடையில் வேலை பார்த்துவந்தார். ரியாஸ் கானுக்கு, ஓய்வு நேரங்களில் ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு அடிமையாகி, ரியாஸ் கான் பல லட்சம் ரூபாயை இழந்ததாகச் சொல்லப்படுகிறது. கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாடி வந்திருக்கிறார் அவர். இதனால், கடனை அடைக்க முடியாமல் தவித்த சூழ்நிலையில், கடன் கொடுத்தவர்கள் அவரிடம் பணம் கேட்டு நெருக்கியிருக்கின்றனர். இதனால் மனமுடைந்த ரியாஸ் கான், இன்று ஈரோட்டிலிருந்து வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் வந்திருக்கிறார்.

ரியாஸ் கான்
ரியாஸ் கான்

அப்போது, தன்னுடைய நண்பன் வேலு என்பவரை அலைபேசியில் அழைத்து, தன்னுடைய தாயைப் பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு, அலைபேசியைத் துண்டித்திருக்கிறார். பின்னர், காவிரி ஆற்றின் மேல் செல்லும் பழைய பாலத்தின்மீது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, திடீரென பாலத்தின்மீது நின்று காவிரி ஆற்றில் குதித்திருக்கிறார். இதையடுத்து, வாகன ஓட்டிகள் கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த வெப்படை தீயணைப்பு வீரர்கள், இரண்டு மணி நேரத்துக்கு மேலாக காவிரி ஆற்றில் பரிசல் மூலம் தேடி, ரியாஸ் கான் உடலை மீட்டனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து, பள்ளிப்பாளையம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.