Published:Updated:

கர்நாடகா: ‘பசு பாதுகாப்பு’ என்ற பெயரில் இஸ்லாமிய இளைஞர் கொலை; பாஜக-வைச் சாடும் எதிர்க்கட்சிகள்!

கொலைசெய்யப்பட்ட இத்ரீஸ் பாஷா, குற்றவாளி புனித் கிரேஹள்ளி
News
கொலைசெய்யப்பட்ட இத்ரீஸ் பாஷா, குற்றவாளி புனித் கிரேஹள்ளி

‘‘மாடுகளை ஏற்றிச் சென்றவரைக் கொலைசெய்த புனித் கிரேஹள்ளி பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர். அப்படியென்றால் இது பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட கொலையா?’’ – காங்கிரஸ்.

Published:Updated:

கர்நாடகா: ‘பசு பாதுகாப்பு’ என்ற பெயரில் இஸ்லாமிய இளைஞர் கொலை; பாஜக-வைச் சாடும் எதிர்க்கட்சிகள்!

‘‘மாடுகளை ஏற்றிச் சென்றவரைக் கொலைசெய்த புனித் கிரேஹள்ளி பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர். அப்படியென்றால் இது பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட கொலையா?’’ – காங்கிரஸ்.

கொலைசெய்யப்பட்ட இத்ரீஸ் பாஷா, குற்றவாளி புனித் கிரேஹள்ளி
News
கொலைசெய்யப்பட்ட இத்ரீஸ் பாஷா, குற்றவாளி புனித் கிரேஹள்ளி

கர்நாடகா மாநிலத்தில், பசுக்களை ஏற்றிச் சென்ற இஸ்லாமியர்கள்மீது, ‘பசு பாதுகாவலர்கள்’ என்று கூறிய கும்பல் தாக்குதல் நடத்தி, இளைஞர் ஒருவரை துன்புறுத்தி கொடூரக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சையது ஜாகீர் (40), இத்ரீஸ் பாஷா (39), இர்ஃபான். லாரி வைத்திருக்கும் இவர்கள், வாரந்தோறும் கர்நாடகா மாநிலத்தில் மாடுகளை வாங்கி, இறைச்சிக்காக தமிழகம், கேரளாவுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்துவருகின்றனர்.

கொலைசெய்யப்பட்ட இத்ரீஸ் பாஷா.
கொலைசெய்யப்பட்ட இத்ரீஸ் பாஷா.

இரண்டு நாள்களுக்கு முன்பு, 16 மாடுகளை ஏற்றிக்கொண்டு, மூவரும் தமிழகம் நோக்கிப் பயணித்தபோது, கனகபுரா தாலுகா, சாந்தனூர் போலீஸ் ஸ்டேஷன் அருகே, ‘பசு பாதுகாப்புக்குழு’ என்று கூறிய கும்பல், அவர்களின் வாகனத்தை நிறுத்தி அவர்களிடம் வாக்குவாதம் செய்து அவர்களைத் தாக்கியிருக்கிறது.

வாகனத்திலிருந்த, இத்ரீஸ் பாஷா, இர்ஃபான் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், அங்கு வந்த போலீஸார், சையது ஜாகீரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச்சென்றனர். இந்த நிலையில், 1-ம் தேதி காலை, அந்தப் பகுதியிலுள்ள புதர் அருகே, உடம்பில் தீக்காயம், ரத்தக் காயங்களுடன் இத்ரீஸ் பாஷா (39) கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார். அவரின் சடலத்தைமீட்ட போலீஸார் விசாரணை நடத்தியதில், ‘பசு பாதுகாப்புக்குழு’ நடத்திவரும் புனித் கிரேஹள்ளி என்பவர், தன்னுடைய ஆதரவாளர்களுடன், இத்ரீஸ் பாஷாவைக் கடத்திச்சென்று, கொடூரமாகச் சித்ரவதை செய்து கொலைசெய்தது தெரியவந்தது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சையது ஜாகீர் நிருபர்களிடம், ‘‘31-ம் தேதி இரவு சாந்தனூர் போலீஸ் ஸ்டேஷன் அருகே எங்களை வழிமறித்த ‘பசு பாதுகாவலர்கள் குழுவினர்’, ‘பாகிஸ்தானுக்கு போ’ என்று கூறி எங்களைத் தாக்கினர். அப்போது, இத்ரீஸ் பாஷா, இர்ஃபான் தப்பியோடியபோது நான் மட்டுமே வாகனத்தில் இருந்தேன். என்னை போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச்சென்று, என்மீது பசுவதைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்தனர். 1-ம் தேதி காலை நான் மீண்டும் போலீஸ் ஸ்டேஷன் சென்றபோது, இத்ரீஸ் பாஷா கொலைசெய்யப்பட்ட தகவலை போலீஸார் தெரிவித்தனர்’’ என வருத்தத்துடன் தெரிவித்தார்.

‘பசு பாதுகாப்புக்குழு’ தலைவர் புனித் கிரேஹள்ளியைக் கைதுசெய்த போலீஸார், அவர்மீது கொலை வழக்கு பதிவுசெய்து விசாரிக்கின்றனர். தேர்தல் நெருங்கும் நிலையில், இந்தச் சம்பவம் நடந்திருப்பதால், அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கர்நாடகா காங்கிரஸ் தனது ட்விட்டரில், ``கர்நாடகத்தில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக தினமும் வன்முறைச் சம்பவங்கள் நடக்கின்றன. பசு பாதுகாப்பு என்ற பெயரில் இஸ்லாமியர்கள், தொடர்ந்து கொல்லப்படுவதைத் தடுக்காமல், பா.ஜ.க அரசு வேடிக்கை பார்க்கிறது.

இது போன்ற சம்பவங்களுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கிறது. மாடுகளை ஏற்றிச் சென்றவரைக் கொலைசெய்த புனித் கிரேஹள்ளி பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர். அப்படியென்றால் இது பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட கொலையா?" எனக் கடுமையாக விமர்சித்திருக்கிறது.

பா.ஜ.க எம்.பி, எம்.எல்.ஏ-க்களுடன், புனித் கிரேஹள்ளி.
பா.ஜ.க எம்.பி, எம்.எல்.ஏ-க்களுடன், புனித் கிரேஹள்ளி.

மதச்சார்பற்ற ஜனதா தளத்தினர், ‘‘புனித் கிரேஹள்ளி பசு பாதுகாப்பு என்ற பெயரில், பல இஸ்லாமியர்களைச் சித்ரவதை செய்து அதை தனது ஃபேஸ்புக்கில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இது போன்ற நபர்களைக் கைதுசெய்யாமல், இது போன்ற சம்பவங்களைத் தடுக்காமல், பா.ஜ.க வேடிக்கை பார்க்கிறது. மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு தோற்றுவிட்டது’’ என்று குற்றம்சாட்டியிருக்கின்றனர்.