Published:Updated:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மயில் வேட்டை - வாகன சோதனையில் சிக்கிய மூன்று பேர்!

மயில்வேட்டை
News
மயில்வேட்டை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் தோட்டத்தில் மயில்களை வேட்டையாடிய மூன்று பேரை வனத்துறையினர்கள் கைதுசெய்தனர்.

Published:Updated:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மயில் வேட்டை - வாகன சோதனையில் சிக்கிய மூன்று பேர்!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் தோட்டத்தில் மயில்களை வேட்டையாடிய மூன்று பேரை வனத்துறையினர்கள் கைதுசெய்தனர்.

மயில்வேட்டை
News
மயில்வேட்டை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை ஊராட்சி அலுவலகம் பகுதியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் சாக்குப் பையில் இறந்த மயில்கள் இருந்தன. இது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் துரைச்சாமியாபுரத்தைச் சேர்ந்த லிங்கம் (65), மம்சாபுரத்தைச் சேர்ந்த முத்துச்செல்வம் (30), சரவணக்குமார் (30) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து மாதா மலை அருகேயுள்ள தனியார் தோட்டத்தில் விஷம் வைத்து மயில்களை வேட்டையாடியது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸார் மூவரையும், இறந்த மயில்களுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். வனத்துறையினர் லிங்கம், முத்துசெல்வம், சரவணக்குமார் ஆகிய மூன்று பேரையும் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். கால்நடை மருத்துவர்கள் இறந்த மயில்களை உடற்கூறாய்வு செய்து ஆய்வுக்கு அனுப்பிவைத்திருக்கின்றனர்.