Published:Updated:

விழுப்புரம்:`வீட்டுமனை வாங்கித் தர்றோம்' - பல லட்ச ரூபாய் மோசடி செய்ததாக எஸ்.பி அலுவலகத்தில் புகார்!

புகார் அளித்த பாதிக்கப்பட்ட மக்கள்
News
புகார் அளித்த பாதிக்கப்பட்ட மக்கள்

வீட்டுமனை கொடுப்பதாகக் கூறி, பல லட்ச ரூபாய் மோசடி செய்த நபர்கள்மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து, பாதிக்கப்பட்ட மக்கள் விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்தில் புகாரளித்தனர்.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகேயுள்ள ஆ.கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த இந்திரா உள்ளிட்ட சிலர் நேற்று முன்தினம் (11.05.2023) விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தனர். அதில், "முருகன், ஏழுமலை ஆகிய இருவர், திருக்கோவிலூர் அடுத்த பாபா கோயில் பின்புறம் வீட்டுமனை வாங்கித்தருவதாகக் கூறியதன் அடிப்படையில், மாதா மாதம் 750 ரூபாய் என்ற வீதம் ஐந்து வருடங்கள் பணம் கட்டிவந்தோம். எங்களைப் போன்று எங்கள் ஊரில் பலர் இது போன்று பணம் கட்டியிருக்கின்றனர்.

 மோசடி
மோசடி

ஆனால், சொன்னபடி வீட்டுமனையைத் தராமலும், பணத்தைத் திருப்பி தராமலும் ஏமாற்றியதால், பணம் கொடுத்தவர்கள் சென்று கேட்கும்போது, அதிகார தொனியில் பேசுகிறார்கள். அவர்கள்மீது ஏற்கெனவே புகார் கொடுத்திருக்கிறோம். அவர்களை, போலீஸார் விசாரணைக்கு நேரில் அழைத்தும் அவர்கள் வரவில்லை. சிறுகச் சிறுகச் சேர்த்து பணம் கட்டினோம். ஆனால் ஏமாற்றிவிட்டார்கள். இதனால் எங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்

எனவே ஐயா அவர்கள், சம்பந்தப்பட்ட நபர்கள்மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து, எங்களது பணத்தை மீட்டுத்தரும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார். வீட்டுமனை தருவதாக ஆசைவார்த்தை கூறி, அப்பாவி மக்களை மாத தவணை கட்டவைத்து, பல லட்ச ரூபாய் மோசடி செய்திருப்பதாகக் கூறப்படும் சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.