Published:Updated:

குடும்பத் தகராறு: அண்ணியை இரும்புக்கம்பியால் அடித்துக் கொன்ற வாலிபர் - திருவள்ளூரில் அதிர்ச்சி

உயிரிழந்த ரம்யா
News
உயிரிழந்த ரம்யா

திருவள்ளூர் மாவட்டத்தில் அண்ணி முறையாகவேண்டிய ஒரு பெண்ணை, வாலிபர் இரும்புக்கம்பியால் சரமாரியாக அடித்துக் கொலை செய்த சம்பவம் நடந்திருக்கிறது.

Published:Updated:

குடும்பத் தகராறு: அண்ணியை இரும்புக்கம்பியால் அடித்துக் கொன்ற வாலிபர் - திருவள்ளூரில் அதிர்ச்சி

திருவள்ளூர் மாவட்டத்தில் அண்ணி முறையாகவேண்டிய ஒரு பெண்ணை, வாலிபர் இரும்புக்கம்பியால் சரமாரியாக அடித்துக் கொலை செய்த சம்பவம் நடந்திருக்கிறது.

உயிரிழந்த ரம்யா
News
உயிரிழந்த ரம்யா

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகிலுள்ள கன்னிகைப்பேரைச் சேர்ந்தவர் திராவிட பாலு. இவர் கன்னிகைப்பேர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராகவும், எல்லாபுரம் திமுக-வின் ஒன்றியச் செயலாளராகவும் இருந்துவந்தார். கடந்த 2013-ம் ஆண்டு, திராவிட பாலு பட்டப்பகலில் பெட்ரோல் குண்டு வீசி கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டார்.

திராவிட பாலு
திராவிட பாலு

தற்போது அவரின் தம்பி சத்தியவேலு எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளராகப் பதவி வகித்துவருகிறார். மேலும், சத்தியவேலு குடும்பத்துக்கும், திராவிட பாலு குடும்பத்துக்கும் நீண்ட நாளாக முன்விரோதம் இருந்துவருவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் திராவிட பாலு வீட்டுக்கு வந்த சத்தியவேலுவின் மகன் புவன்குமார் என்ற விஷால் (22), வீட்டிலிருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றவே, வீட்டுக்குள் புகுந்த விஷால், தான் வைத்திருந்த இரும்புக்கம்பியைக்கொண்டு, அவருடைய அண்ணன் முருகன் (42), அண்ணி ரம்யா (32), பெரியம்மா செல்வி, அண்ணனின் மகன் கருணாநிதி (15) ஆகியோரைச் சரமாரியாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அடிபட்டுக் கிடந்தவர்களை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தலையில் பலத்த காயமடைந்த ரம்யாவைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தகவல் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த ரம்யா
உயிரிழந்த ரம்யா

மேலும், படுகாயமடைந்த மற்ற மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், கொலை வழக்காகப் பதிவுசெய்து தப்பியோடிய கொலையாளியைத் தீவிரமாகத் தேடிவருகிறார்கள். மேலும், இந்தச் சம்பவத்துக்கு குடும்பத் தகராறு காரணமா அல்லது வேறு எதுவும் காரணம் இருக்கிறதா என்று கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.