Published:Updated:

கள்ளச்சந்தையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை - சென்னையில் 17 பேர் கைது

ஐபிஎல் டிக்கெட்
News
ஐபிஎல் டிக்கெட்

ஐபிஎல் டிக்கெட்டுகளைக் கள்ளச்சந்தையில் விற்ற 17 பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:

கள்ளச்சந்தையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை - சென்னையில் 17 பேர் கைது

ஐபிஎல் டிக்கெட்டுகளைக் கள்ளச்சந்தையில் விற்ற 17 பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

ஐபிஎல் டிக்கெட்
News
ஐபிஎல் டிக்கெட்

சென்னை சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி 12-ம் தேதி நடந்தது. இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகளைக் கள்ளச்சந்தையில் சிலர் விற்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருவல்லிக்கேணி போலீஸார், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம், அதைச் சுற்றியிருக்கும் பட்டாபிராம் கேட், வாலாஜா சாலை, பெல்ஸ் சாலை, வாலாஜா சாலை சந்திப்பு, விக்டோரியா ஹாஸ்டல் சாலை சந்திப்பு, சேப்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட பகுதிகளில் மப்டியில் கண்காணித்தனர்.

அப்போது கள்ளச்சந்தையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளைக் கூடுதல் விலைக்கு விற்ற 17 பேரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளைக் கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. அதனால், அவர்களிடமிருந்து 47 டிக்கெட்டுகள், 53,200 ரூபாய் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கைது
கைது

இது குறித்து திருவல்லிக்கேணி போலீஸார், ``ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளைக் கூடுதல் விலைக்கு விற்றதாக சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ரஞ்சன் (19), லோகேஷ், விமல்ராஜ், முகமது ராசீக், ராயப்பேட்டையைச் சேர்ந்த முகமது அசிம், ஜீவா, அயனாவரத்தைச் சேர்ந்த விக்னேஷ், சேப்பாக்கத்தைச் சேர்ந்த சரவணன், அண்ணாநகரைச் சேர்ந்த இம்ரான், புரசைவாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேசன், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் பாரி, பள்ளிக்கரணையைச் சேர்ந்த கார்த்திகேயன், நீலாங்கரையைச் சேர்ந்த பீட்டர், ஆந்திராவைச் சேர்ந்த உதய்கிரன், திருவான்மியூரைச் சேர்ந்த தேஜஸ், சூரஜ் ஆகிய 17 பேரைக் கைதுசெய்திருக்கிறோம்" என்றனர்.