Published:Updated:

சென்னை: பார்க்கிங் பிரச்னை; ஆட்டோ டிரைவரை அடித்துக் கொன்ற கார் டிரைவர்!

கொலை - கைது
News
கொலை - கைது

வீட்டு வாசலில் வாகனம் விடுவதில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநரை கார் ஓட்டுநர் அடித்துக் கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:

சென்னை: பார்க்கிங் பிரச்னை; ஆட்டோ டிரைவரை அடித்துக் கொன்ற கார் டிரைவர்!

வீட்டு வாசலில் வாகனம் விடுவதில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநரை கார் ஓட்டுநர் அடித்துக் கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கொலை - கைது
News
கொலை - கைது

சென்னை, செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு 6-வது நிழற்சாலை, 62-வது குறுக்குத் தெருவில் 50 வயதான ஆட்டோ ஓட்டுநர் பாலு என்பவர் தனியாக வசித்துவந்தார். இவரது வீட்டுக்கு அருகில் 38 வயதான கார் ஓட்டுநர் தணிகைவேலு என்பவர் வசித்துவந்தார். இரண்டு மாடிகள் கொண்ட இந்தச் சுனாமி குடியிருப்புப் பகுதியின் மேல் தளத்தில் வாடகைக்கு இருந்துவந்த தணிகைவேலு, பாலு இருவருக்குமிடையே தங்களது வாகனங்களை வீட்டின் கீழே நிறுத்துவது தொடர்பாக அவ்வப்போது தகராறு ஏற்பட்டுவந்திருக்கிறது.

நேற்று இருவரும் மது அருந்தியிருந்த நிலையில், கார் ஓட்டுநர் தணிகைவேலு ஆட்டோ ஓட்டுநர் பாலுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஒருகட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், மேல் வீட்டிலிருந்து படிக்கட்டில் கட்டிப்பிடித்து உருண்டபடி இருவரும் கீழே விழுந்திருக்கின்றனர். பின்னர் மது போதையில் இருந்த கார் ஓட்டுநர் தணிகைவேலு, தனது காரின் சக்கரத்தை கழட்டுவதற்காக வைத்திருந்த இரும்பு ஜாக்கி ராடால் ஆட்டோ ஓட்டுநர் பாலுவின் மண்டையில் கண்மூடித்தனமாகத் தாக்கியிருக்கிறார்.

கொலை
கொலை
சித்திரிப்புப் படம்

இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய ஆட்டோ ஓட்டுநரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, செம்மஞ்சேரி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த செம்மஞ்சேரி போலீஸார் நிகழ்விடத்துக்கு 108 ஆம்புலன்ஸுடன் விரைந்து சென்று, உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த ஆட்டோ ஓட்டுநர் பாலுவை மீட்டு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பாலு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து கார் ஓட்டுநர் தணிகைவேலுவைக் கைதுசெய்த செம்மஞ்சேரி போலீஸார், காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். கார், ஆட்டோ நிறுத்துவதில் இருவருக்குமிடையே அவ்வப்போது வாய்த்தகராறு ஏற்பட்டு வந்ததும், மொட்டை மாடிக்குச் செல்வதற்கான படிக்கட்டுகள் சேதமடைந்தது தொடர்பாகவும் ஆட்டோ ஓட்டுநர் பாலுவிடம் அடிக்கடி தணிகைவேலு தகராறு செய்துவந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

சென்னை: பார்க்கிங் பிரச்னை; ஆட்டோ டிரைவரை அடித்துக் கொன்ற கார் டிரைவர்!

வழக்கம்போல் நேற்று இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மது அருந்தியதால் ஜாக்கி ராடால் கண்மூடித்தனமாகத் தாக்கியதாக தணிகைவேல் விசாரணையில் தெரிவித்திருக்கிறார். அதையடுத்து தணிகைவேல் மீது வழக்கு பதிவுசெய்த செம்மஞ்சேரி போலீஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.