Published:Updated:

"நான் கைராசியான டாக்டர்; தொட்டாலே வியாதியெல்லாம் பறந்துடும்!" - போலீஸில் சிக்கிய போலி டாக்டர்

குளித்தலை
News
குளித்தலை

'நான் கைராசியான டாக்டர், நான் தொட்டாலே, உங்க வியாதிகள் பறந்துடும்' என்று கூறி, மருத்துவம் படிக்காமலேயே மருத்துவம் பார்த்துவந்த போலி மருத்துவரை, போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

Published:Updated:

"நான் கைராசியான டாக்டர்; தொட்டாலே வியாதியெல்லாம் பறந்துடும்!" - போலீஸில் சிக்கிய போலி டாக்டர்

'நான் கைராசியான டாக்டர், நான் தொட்டாலே, உங்க வியாதிகள் பறந்துடும்' என்று கூறி, மருத்துவம் படிக்காமலேயே மருத்துவம் பார்த்துவந்த போலி மருத்துவரை, போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

குளித்தலை
News
குளித்தலை

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே இருக்கிறது புரசம்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவர், 'நான் டாக்டர்' என்று கூறி, போலி மருத்துவம் செய்துவந்தது தெரியவந்திருக்கிறது. இவர் உரிய மருத்துவம் படிக்காமல், நெய்தலூர் காலனிப் பகுதியிலுள்ள தனியார் கட்டடத்தில் வாடகைக்கு ரூம் எடுத்து, அதில் கிளினிக் நடத்திவந்திருக்கிறார். அந்தப் பகுதி மக்களுக்கு பல வருடங்களாக மருத்துவம் பார்த்துவந்திருக்கிறார். இந்த நிலையில், இவரிடம் சிகிச்சைப் பெற்ற பலருக்கு உடல் பிரச்னைகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அந்தப் பகுதி பொதுமக்கள் தொடர் புகாரளித்திருக்கின்றனர்.

குளித்தலை
குளித்தலை

இதனால், நெய்தலூர் காலனிப் பகுதியிலிருந்த தன்னுடைய கிளினிக்கை காலி செய்துவிட்டு, தனது வீட்டில் வைத்தே பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்துவந்திருக்கிறார். இது குறித்து குளித்தலை அரசு மருத்துவமனை மருத்துவர் திவாகர் அளித்தப் புகாரின்பேரில், குளித்தலை காவல் நிலைய ஆய்வாளர் காசிபாண்டியன், மருத்துவ ஆய்வாளர் மாசேதுங், நங்கவரம் தெற்குப் பகுதி கிராம நிர்வாக அலுவலர் சசிகலா ஆகியோர் புரசம்பட்டியிலுள்ள அவரது வீட்டுக்குச் சென்று சோதனையிட்டனர்.

கைது
கைது

அவர்களது விசாரணையில் பெரியசாமி, முறையான மருத்துவப் படிப்பு படிக்காமல், பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்துவந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலி மருத்துவர் பெரியசாமியைக் குளித்தலை காவல் நிலைய போலீஸார் கைதுசெய்தனர். அதோடு, அங்கிருந்த மருந்துப்பொருள்கள், ஊசிகள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர். 'நான் கைராசியான டாக்டராக்கும்; நான் தொட்டாலே உங்க வியாதிகள் பறந்துடும்' என்று கூறி போலி வைத்தியம் பார்த்துவந்த பெரியசாமி, உண்மையில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துவிட்டு, கல்லூரியில் பி.எஸ்சி படிப்பை பாதியிலேயே நிறுத்தியவராம். இவரிடம் மருத்துவம் பார்த்த பொதுமக்கள் இதனால் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.