Published:Updated:

நாமக்கல்: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 15 வயது சிறுமி! - போக்சோவில் கூலித்தொழிலாளி கைது

கைது
News
கைது ( சித்திரிப்புப் படம் )

சிறுமியை மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்த நபரை, போலீஸார் போக்சோவில் கைதுசெய்தனர்.

Published:Updated:

நாமக்கல்: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 15 வயது சிறுமி! - போக்சோவில் கூலித்தொழிலாளி கைது

சிறுமியை மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்த நபரை, போலீஸார் போக்சோவில் கைதுசெய்தனர்.

கைது
News
கைது ( சித்திரிப்புப் படம் )

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே இருக்கும் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கன் (வயது 50). கூலித்தொழிலாளியான ரங்கன், அதே பகுதியைச் சேர்ந்த பதினைந்து வயது சிறுமியை, வீட்டில் தனியாக இருந்தபோது மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தனக்கு நடந்த கொடுமை குறித்து அந்தச் சிறுமி, தன்னுடைய தாயாரிடம் கண்ணீரோடு தெரிவித்திருக்கிறார். இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், இது குறித்து நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

போக்சோ வழக்கு
போக்சோ வழக்கு

அந்தப் புகாரின் அடிப்படையில், போலீஸார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்து ரங்கனைக் கைதுசெய்தனர். பின்னர், ரங்கனை நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி, கைதுசெய்யப்பட்ட ரங்கனுக்கு நெருங்கிய உறவினர் என்றும் சொல்லப்படுகிறது. இந்தச் சம்பவம், அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.