Published:Updated:

பொதுத்தேர்வு அறையில் 10-ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம்; ஆசிரியர் அதிரடியாகக் கைது!

கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் வேலவன்
News
கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் வேலவன்

பொதுத்தேர்வு எழுதிய மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியரை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:

பொதுத்தேர்வு அறையில் 10-ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம்; ஆசிரியர் அதிரடியாகக் கைது!

பொதுத்தேர்வு எழுதிய மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியரை போலீஸார் கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் வேலவன்
News
கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் வேலவன்

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கடந்த 6-ம் தேதி முதல் பொதுத்தேர்வு நடைபெற்றுவருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 116 தேர்வு மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், தக்கலை அருகேயுள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 6-ம் தேதி மாணவ, மாணவிகள் தமிழ் தேர்வு எழுதினர். அந்தப் பள்ளியிலுள்ள ஒரு தேர்வறைக் கண்காணிப்பாளராக அருமனை அருகேயுள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றிவரும் ஆசிரியர் வேலவன் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். இவர் பணியிலிருந்த தேர்வறையில், வேர்கிளம்பி பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் தேர்வு எழுதினார்.

பொதுத்தேர்வு
பொதுத்தேர்வு
மாதிரி போட்டோ

அந்த மாணவியின் அருகில் சென்ற ஆசிரியர் வேலவன், மாணவியியைத் தொட்டுப் பேசி சில்மிஷம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிா்ச்சியடைந்த மாணவி, தேர்வு எழுதும் சமயத்தில் என்ன சொல்வது எனத் தெரியாமல் இருந்திருக்கிறார். தேர்வு முடிந்ததும் வீட்டுக்குச் சென்ற மாணவி, பெற்றோரிடம் ஆசிரியரின் தவறான நடவடிக்கை பற்றி கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் இது குறித்து புகார் கூறினர்.

கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் வேலவன்
கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் வேலவன்

சம்பந்தப்பட்ட ஆசிரியர் குறித்து பள்ளிக்கல்வித்துறைக்குப் புகாரளித்ததுடன், குழித்துறை அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகாரளித்திருக்கின்றனர். புகாரின்பேரில் குழித்துறை அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவுசெய்து, வேலவனைக் கைதுசெய்தனர். தேர்வு அறையில் வைத்து மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியரின் செயல் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.