Published:Updated:

திருப்பூர்: `திருமணம் செய்துகொள்ளலாம்' ; ப்ளஸ் டூ மாணவனைக் கடத்திச் சென்ற இளம்பெண் - போக்சோவில் கைது

போக்சோ
News
போக்சோ

ப்ளஸ் டூ மாணவனைக் கடத்திச் சென்ற இளம்பெண் போக்சோவில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:

திருப்பூர்: `திருமணம் செய்துகொள்ளலாம்' ; ப்ளஸ் டூ மாணவனைக் கடத்திச் சென்ற இளம்பெண் - போக்சோவில் கைது

ப்ளஸ் டூ மாணவனைக் கடத்திச் சென்ற இளம்பெண் போக்சோவில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

போக்சோ
News
போக்சோ

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் பகுதியைச் சேர்ந்த ப்ளஸ் டூ மாணவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த காயத்ரி (24) என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. வெளியூரில் தங்கிப் படிக்கும் மாணவர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெள்ளக்கோவிலிலுள்ள வீட்டுக்கு வந்துவிட்டு, மீண்டும் பள்ளிக்குப் புறப்பட்டுச் சென்றார். ஆனால், அந்த மாணவர் பள்ளிக்குச் செல்லவில்லை.

இது குறித்து வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் மாணவரின் பெற்றோர் புகாரளித்தனர். போலீஸாரின் விசாரணையில் அந்த மாணவனுக்கும், காயத்ரிக்கும் பழக்கம் இருந்ததும், அவரும் வீட்டிலிருந்து மாயமானதும் தெரியவந்தது.

திருப்பூர்
திருப்பூர்

இதையடுத்து, போலீஸார் நடத்திய தொடர் விசாரணையில் அவர்கள் இருவரும் ஓசூரில் தனியாக வீடு எடுத்து தங்கி, அங்கு அவருடன் காயத்ரி வாழ்ந்துவந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, இருவரையும் வெள்ளக்கோவிலுக்கு போலீஸார் அழைத்துவந்தனர்.

அங்கு காயத்ரியிடம் விசாரணை நடத்தியபோது, திருமணம் செய்துகொள்ளலாம் எனக் கூறி மாணவனைக் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, காயத்ரி மீது போக்சோ சட்டத்தின்கீழ் போலீஸார் வழக்கு பதிவுசெய்து அவரைக் கைதுசெய்தனர். மாணவரை மீட்டு அவரின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.