Published:Updated:

தூத்துக்குடி: "செலவுக்குப் பணம் கேட்டேன் தரல... கொன்னுட்டேன்”- அத்தையைக் கொலைசெய்த அண்ணன் மகன்!

உடன்குடி
News
உடன்குடி

தூத்துக்குடியில் செலவுக்குப் பணம் தர மறுத்த அத்தையை, அண்ணன் மகனே கொலைசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:

தூத்துக்குடி: "செலவுக்குப் பணம் கேட்டேன் தரல... கொன்னுட்டேன்”- அத்தையைக் கொலைசெய்த அண்ணன் மகன்!

தூத்துக்குடியில் செலவுக்குப் பணம் தர மறுத்த அத்தையை, அண்ணன் மகனே கொலைசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

உடன்குடி
News
உடன்குடி

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியைச் சேர்ந்தவர் ரஸ்கின்டிரோஸ். இவரின் மனைவி மெட்டில்டா. இவர் குலசேகரன்பட்டினத்திலுள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்துவந்தார். இவரின் கணவர் மும்பையில் வசித்துவருகிறார். பள்ளி ஆசிரியையாக இருப்பதால், மெட்டில்டா மட்டும் உடன்குடியிலுள்ள வீட்டில் தனியாக வசித்துவந்தார்.  

மெட்டில்டா - ஜெயதீபக்
மெட்டில்டா - ஜெயதீபக்

இந்த நிலையில், நேற்று  மாலை சுமார் 4 மணி அளவில் மெட்டில்டாவின் வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டது. இதனால், அக்கம் பக்கத்தினர் மெட்டில்டா வீட்டின் கதவைத் தட்டினார்கள். ஆனால், கதவு திறக்கப்படவில்லை. ஜன்னல் வழியே பார்த்தபோது, மெட்டில்டா உயிரிழந்த நிலையில், கிடந்திருக்கிறார். குலசேகரன்பட்டினம் காவல் நிலைய போலீஸார் வீட்டின் கதவை உடைத்துப் பார்த்தபோது,  மெட்டில்டாவின் கழுத்துப் பகுதியில் காயங்கள் இருந்தன. வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்திருக்கிறது.

அவர் காதில் அணிந்திருந்த கம்மல், கழுத்தில் அணிந்திருந்த தங்க செயின், கையில் அணிந்திருந்த வளையல்களைக் காணவில்லை. இதனால், நகைக்காக கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தினர். மெட்டில்டாவின் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் நபர்கள் குறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். அத்துடன் அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வுசெய்தனர்.

மெட்டில்டாவின் வீடு
மெட்டில்டாவின் வீடு

அதில், மெடில்டாவின் அண்ணன் மகனான கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்தருவையைச் சேர்ந்த ஜெயதீபக், தன் அத்தை மெட்டில்டாவைப் பார்க்க அடிக்கடி வந்து செல்வது தெரியவந்தது. அத்துடன் சிசிடிவி கேமரா பதிவுகளிலும் ஜெயதீபக், மெட்டில்டா வீட்டிலிருந்து பதற்றத்துடன் வெளியே ஓடிச் சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ஜெயதீபக்கை போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்தியதில், அத்தை மெட்டில்டாவைக் கொலைசெய்ததை ஒப்புக்கொண்டார்.

இது குறித்து போலீஸாரிடம், “எனக்கு குடிப்பழக்கம் உண்டு. எந்த வேலைக்கும் சரியாகப் போக மாட்டேன். எங்க வீட்ல எனக்கு செலவுக்காகப் பணம் தர மாட்டாங்க. அதனால அத்தை மெட்டில்டாவிடம் அடிக்கடி பணம் கேட்பேன். சில நேரங்களில் அவரும் தர மறுப்பார். எனக்கு அவசரத் தேவையாக ரூ.10,000 தேவைப்பட்டது. அத்தையிடம் கேட்டேன்.

குலசேகரன்பட்டினம் காவல் நிலையம்
குலசேகரன்பட்டினம் காவல் நிலையம்

எங்கிட்ட பணம் இல்ல. இனிமேல் வீட்டுக்கு வராதே..” எனச் சொல்லி என்னைக் கீழே தள்ளிவிட்டார். கீழே தள்ளிவிட்ட ஆத்திரத்தில் தலையணையால் அத்தையின் முகத்தை அழுத்திக் கொலைசெய்தேன். பணம் தேவையிருந்ததால், அவரின் உடலில் அணிந்திருந்த நகைகளை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினேன்” எனச் சொல்லி போலீஸாரையே அதிர வைத்திருக்கிறார்.