Published:Updated:

அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு; கைதுசெய்யப்பட்ட அண்ணாமலை `வார் ரூம்' நிர்வாகியின் பின்னணி?

பா.ஜ.க செல்வக்குமார்
News
பா.ஜ.க செல்வக்குமார்

பா.ஜ.க தொழில்துறை பிரிவு மாநிலத் துணைத் தலைவரும், அண்ணாமலை வார் ரூமில் முக்கியப் பிரமுகருமான செல்வக்குமார் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:

அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு; கைதுசெய்யப்பட்ட அண்ணாமலை `வார் ரூம்' நிர்வாகியின் பின்னணி?

பா.ஜ.க தொழில்துறை பிரிவு மாநிலத் துணைத் தலைவரும், அண்ணாமலை வார் ரூமில் முக்கியப் பிரமுகருமான செல்வக்குமார் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

பா.ஜ.க செல்வக்குமார்
News
பா.ஜ.க செல்வக்குமார்

கோவை, காளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்வக்குமார். இவர் பா.ஜ.க தொழில்துறை பிரிவு மாநிலத் துணைத் தலைவராக இருக்கிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் வார் ரூமின் முக்கியப் பிரமுகராவார்.

பா.ஜ.க செல்வக்குமார்
பா.ஜ.க செல்வக்குமார்

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை ‘கஞ்சா பாலாஜி’ என விமர்சித்து துஷ்பிரயோகக் கருத்துகளை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுவந்திருக்கிறார். இவரின் கருத்துகள், இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக, கணபதி புதூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர், கோவை மாநகர சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதனடிப்படையில், தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிந்து காவல்துறையினர், செல்வக்குமாரைக் கைதுசெய்திருக்கின்றனர். இதற்கு அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க-வினர் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். தற்போது கோவையில் வசித்தாலும், செல்வக்குமாரின் சொந்த ஊர் கரூர் மாவட்டம்தான்.

ட்விட்டரில் படு ஆக்டிவாக இருக்கும் இவர், அண்ணாமலை பா.ஜ.க மாநிலத் தலைவரான பிறகு அவரது புகழை அதிகம் பேசினார். அரசியலில் அவருக்கு எதிராக இருக்கும் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் குறித்து, கடுமையாக விமர்சித்துவந்தார்.

அண்ணாமலையுடன் செல்வக்குமார்
அண்ணாமலையுடன் செல்வக்குமார்

அதன் விளைவாக அவருக்கு தொழில்துறை பிரிவு மாநிலத் துணைத் தலைவர் பதவியை அண்ணாமலை வழங்கினார். கோவை மாவட்டத்திலும் அவருக்குப் பொறுப்புகள் வழங்கப்பட்டதால், லோக்கலில் பவர்ஃபுல்லான நபராக வலம் வந்தார். இந்த நிலையில்தான், தற்போது போலீஸாரால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.