Published:Updated:

ஈரோடு: போதை ஊசி விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள்; ரகசியத் தகவலை வைத்துப் பிடித்த போலீஸ்!

வலிநிவாரண மாத்திரைகள், ஊசிகள்
News
வலிநிவாரண மாத்திரைகள், ஊசிகள்

ஈரோட்டில் போதை ஊசி விற்பனையில் ஈடுபட்டுவந்த இளைஞர்களை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:

ஈரோடு: போதை ஊசி விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள்; ரகசியத் தகவலை வைத்துப் பிடித்த போலீஸ்!

ஈரோட்டில் போதை ஊசி விற்பனையில் ஈடுபட்டுவந்த இளைஞர்களை போலீஸார் கைதுசெய்தனர்.

வலிநிவாரண மாத்திரைகள், ஊசிகள்
News
வலிநிவாரண மாத்திரைகள், ஊசிகள்

ஈரோடு, மாதவ கிருஷ்ணா வீதியில் போதை ஊசி விற்பனை செய்யப்படுவதாக ஈரோடு டவுன் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்து, காவல் ஆய்வாளர் தெய்வராணி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வுமேற்கொண்டபோது, அங்கிருந்த அந்தியூர் தவுட்டுப்பாளையம் வேங்கையன் தெருவைச் சேர்ந்த வெங்கடேசனின் மகன் விக்னேஷ் (23), தவுட்டுப்பாளையம் நஞ்சப்பா வீதியைச் சேர்ந்த மூர்த்தியின் மகன் ஜீவானந்தம் (21) ஆகியோரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். அதில், அவர்களிடம் வலிநிவாரண மாத்திரைகள், ஊசிகள், 1.25 லட்சம் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கைதுசெய்யப்பட்டவர்கள்
கைதுசெய்யப்பட்டவர்கள்

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், வலி நிவாரண மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து அதை ஊசியில் ஏற்றி போதை மருந்தாக விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. இதற்காக அவர்கள் கர்நாடக மாநிலத்திலிருந்து மாத்திரை, ஊசி போன்ற பொருள்களை வாங்கிவந்து, ஈரோட்டில் விற்பனை செய்ததும் தெரியவந்தது.

ஊசி, மாத்திரைகள்
ஊசி, மாத்திரைகள்

தொடர்ந்து விக்னேஷ், ஜீவானந்தம் ஆகியோரைக் கைதுசெய்த போலீஸார், அவர்களிடமிருந்து மாத்திரைகள், ஊசிகள், போதை ஊசி விற்ற ரூ.1.3 லட்சம் பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். இதில், விக்னேஷ்மீது ஏற்கெனவே போதை ஊசி விற்ற வழக்கு அந்தியூர் காவல் நிலையத்தில் நிலுவையிலிருப்பது குறிப்பிடத்தக்கது.