Published:Updated:

சேலம்: லாரி டிரைவர் உடலைத் துண்டித்துப் படுகொலை... தீவிர விசாரணையில் போலீஸ் - என்ன நடந்தது?

மரணம்
News
மரணம்

தாரமங்கலம் அருகே லாரி டிரைவரின் உடலைத் துண்டித்து கொடூரமாகக் கொலைசெய்து, கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:

சேலம்: லாரி டிரைவர் உடலைத் துண்டித்துப் படுகொலை... தீவிர விசாரணையில் போலீஸ் - என்ன நடந்தது?

தாரமங்கலம் அருகே லாரி டிரைவரின் உடலைத் துண்டித்து கொடூரமாகக் கொலைசெய்து, கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மரணம்
News
மரணம்

சேலம், தாரமங்கலம் அருகே பெரியசோரகைப் பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவர் லாரி டிரைவராக இருந்துவருகிறார். இந்த நிலையில், நேற்று தாரமங்கலம் அருகே கருப்புப்பட்டிப் பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இதையடுத்து, அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தாரமங்கலம் போலீஸாருக்குத் தகவல் அளித்ததின் பேரில், தீயணைப்புத் துறையினர் மூலம் கிணற்றில் மிதந்த சடலத்தை மீட்டனர்.

அதில், இரண்டு கைகள் துண்டிக்கப்பட்டும், உடலில் பாதி பாகம் இல்லாமலும் சடலத்தை மீட்டனர். பின்னர் இது குறித்து விசாரணை செய்ததில் இறந்தது லாரி டிரைவர் மணி என்பது தெரியவந்தது. அதையடுத்து, போலீஸார் மணியின் குடும்பத்துக்குத் தகவல் தெரிவித்தனர். அதோடு அவருடைய குடும்பத்தாரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு மணிக்கு அவருடைய மனைவி செல்போன் வாயிலாக தொடர்புகொண்டதும், ஆனால், அவருடைய செல்போன் சுவிட்ச் ஆஃப்பில் இருந்ததாகவும் கூறியிருக்கிறார்.

லாரி டிரைவர் படுகொலை
லாரி டிரைவர் படுகொலை

அதன் மூலம் போலீஸார் மணியின் செல்போன் எண்ணைக் கொண்டு, கடந்த ஒரு வாரமாக இந்த எண்ணுக்கு யார் யாரெல்லாம் தொடர்புகொண்டு பேசியிருக்கின்றனர் என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்கியிருக்கின்றனர்.

மேலும், சம்பவ இடத்துக்கு சேலம் மாவட்ட எஸ்.பி., சிவகுமார் நேரில் வந்து ஆய்வுசெய்தார். பின்னர் மோப்ப நாய்களை வரவழைத்து, சம்பவ இடத்தில் குற்றவாளிகள் குறித்து துப்பு கிடைக்கிறதா என்ற முயற்சியில் ஈடுபட்டனர். லாரி டிரைவர் மணி இவ்வளவு கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டிருப்பது போலீஸார், பொதுமக்களை அதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது. கூலிப்படையை ஏவி யாராவது கொலைசெய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள். மேலும், போலீஸார் பல்வேறு கோணத்தில் முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.