Published:Updated:

`குற்றம் செய்தால் பல் பிடுங்கப்படும்’ - அத்துமீறும் போலீஸ் அதிகாரி; விசாரணைக்கு ஆட்சியர் உத்தரவு

புகார் தெரிவிக்கும் சுபாஷ் சேனை தலைவர் மகாராஜன்
News
புகார் தெரிவிக்கும் சுபாஷ் சேனை தலைவர் மகாராஜன்

சாதாரண குற்றச்சாட்டுக்குள்ளாகும் இளைஞர்களைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, அவர்களின் பற்களைப் பிடுங்கி நூதன தண்டனை வழங்கும் போலீஸ் அதிகாரி செயலுக்கு எதிர்ப்பு வலுத்திருக்கிறது.

Published:Updated:

`குற்றம் செய்தால் பல் பிடுங்கப்படும்’ - அத்துமீறும் போலீஸ் அதிகாரி; விசாரணைக்கு ஆட்சியர் உத்தரவு

சாதாரண குற்றச்சாட்டுக்குள்ளாகும் இளைஞர்களைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, அவர்களின் பற்களைப் பிடுங்கி நூதன தண்டனை வழங்கும் போலீஸ் அதிகாரி செயலுக்கு எதிர்ப்பு வலுத்திருக்கிறது.

புகார் தெரிவிக்கும் சுபாஷ் சேனை தலைவர் மகாராஜன்
News
புகார் தெரிவிக்கும் சுபாஷ் சேனை தலைவர் மகாராஜன்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளராகப் பணியாற்றிவருபவர் பல்பீர் சிங். ஐ.பி.எஸ் அதிகாரியான இவர் பொறுப்பேற்ற பின்னர் அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் நடக்கும் சிறிய குற்றங்களைச் செய்பவர்கள்மீது கூட கடுமையான நடவடிக்கை எடுத்து மனித உரிமை மீறலில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருப்பதால், போலீஸ் அதிகாரி செயலுக்குக் கண்டனம் வலுத்துவருகிறது.

போலீஸ் அதிகாரி பல்பீர் சிங்
போலீஸ் அதிகாரி பல்பீர் சிங்

குற்றச் செயலில் ஈடுபடுவோரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, அவர்களின் பற்களைப் பிடுங்கி தண்டனை வழங்கி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இவரால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பின் தலைவரும் வழக்கறிஞருமான மகாராஜன், “அம்பாசமுத்திரம் பகுதியில் யாராவது சிறிய தவறுகளைச் செய்தால் அவர்கள்மீது வழக்கு பதிவுசெய்வதற்கு பதிலாக காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லும் ஏ.டி.எஸ்.பி பல்பீர் சிங், புகாருக்குள்ளானவர்களின் பற்களைப் பிடுங்குகிறார். அவரால் இதுவரை 30-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

காவல்துறை அதிகாரிமீது புகார்
காவல்துறை அதிகாரிமீது புகார்

அவரால் பாதிக்கப்பட்ட பலர் புகார் கொடுக்கவே அச்சப்படுகிறார்கள். அவர் பல் பிடுங்குவதற்கு, வீரவநல்லூர், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட காவல் நிலையங்களின் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், காவலர்கள் துணையாக இருந்திருக்கிறார்கள். பல் பிடுங்குபவர்களின் கை, கால்களை போலீஸார் பிடித்துக்கொள்ளச் செய்துவிட்டு, துடிக்கத் துடிக்க பற்களைப் பிடுங்கியிருக்கிறார்.

குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் கை, கால்களை உடைப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். சமீபத்தில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரின் காலுக்குக் கீழே துப்பாக்கியால் சுடுவதையும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், பற்களைப் பிடுங்கி எடுக்கும் தண்டனை என்பது இப்போதுதான் கேள்விப்படுகிறோம். இது மனிதாபிமானமற்ற செயல்.

பல் பிடுங்கப்பட்டத்தைக் காட்டும் இளைஞர்
பல் பிடுங்கப்பட்டத்தைக் காட்டும் இளைஞர்

ஒரு மனிதனின் வாழக்கையில் பல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. பல்வேறு நரம்புகளுடன் தொடர்புடைய பற்களை எடுப்பதற்கு முன்பு பல் மருத்துவர்கள்கூட பல சோதனைகளை மேற்கொள்வார்கள். ஆனால், மனிதாபிமானம் இல்லாத வகையில் ஏ.டி.எஸ்.பி பல்பீர் சிங் செயல்படுவது கண்டனத்துக்குரியது. இது தொடர்பாக மனித உரிமை ஆணையத்திலும் புகார் செய்திருக்கிறோம். அவர்மீது நீதிமன்றத்திலும் வழக்கு தொடரவிருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

ஏ.டி.எஸ்.பி பல்பீர் சிங் மூலம் பாதிக்கப்பட்ட பலரும் தற்போது வெளிப்படையாக புகாரளித்துவருகிறார்கள். சில இளைஞர்கள் கூறுகையில், “போலீஸார் கை, கால்களில் ஏறி நின்றுகொள்ள வாய்க்குள் ஜல்லிக்கற்களைப் போடுவார். அதனால் வாயை மூட முடியாமல் இருக்கும்போது பற்களைப் பிடுங்கத் தொடங்குவார். தலையை அசைத்தால் கன்னத்தில் அடிப்பார். அப்போது வாய்க்குள் கிடக்கும் ஜல்லிக்கற்கள் கன்னத்தைக் கிழித்து நரக வேதனையை ஏற்படுத்தும்.

ஒரு பல்லைப் பிடுங்கும்போது அது உடைந்தால் அடுத்த பல்லைப் பிடுங்குவார்
ஐ.பி.எஸ் அதிகாரியால் பாதிக்கப்பட்ட இளைஞர்

சிலருக்கு நான்கு பற்களைக்கூட பிடுங்கியிருக்கிறார். ஒரு பல்லைப் பிடுங்கும்போது அது உடைந்தால் அடுத்த பல்லைப் பிடுங்குவார். அந்த வேதனையை சொல்லவே முடியாது. பல் பிங்கும்போது பல்பீர் சிங், தன் காவல்துறை உடைகளைக் களைந்துவிட்டு ஷார்ட்ஸ் அணிந்திருப்பார். கையில் கிளவுஸ் போட்டிருப்பார். ஒருவரின் பல்லைப் பிடுங்கும்போது அவர், ‘அய்யா.. எனக்குத் திருமணமாகி ஒருமாதம் தான் ஆகிறது’ என்று சொன்னார். உடனே அவரது உயிர்த் தடத்தைப் பிடித்து நசுக்கிவிட்டார். அவரால் இப்போதுவரை சரிவர சாப்பிடவோ நடமாடவோ முடியவில்லை” என்று வேதனை தெரிவித்தார்.

அதிகாரி பல்பீர் சிங் மீதான புகார் தொடர்பாக நேதாஜி சுபாஷ் சேனை மட்டுமல்லாமல் 40-க்கும் மேற்பட்ட அமைப்பினர் இணைந்து தொடர் போராட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டிருக்கின்றனர். அத்துடன், மனித உரிமை ஆணையத்திலும் புகார் செய்திருக்கின்றனர். நீதிமன்றத்திலும் வழக்கு தொடரவிருக்கிறார்கள். அதனால் அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து சேரன்மகாதேவி சப்- கலெக்டர் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டிருக்கிறார்.

பாதிக்கப்பட்ட இளைஞர்
பாதிக்கப்பட்ட இளைஞர்

இந்தப் புகார் குறித்து ஏ.டி.எஸ்.பி-யான பல்பீர் சிங்கிடம் கேட்டதற்கு, “என் மீது தவறான குற்றச்சாட்டுகளைத் தெரிவிக்கிறார்கள். அதில் துளியும் உண்மை கிடையாது” என்று முடித்துக்கொண்டார். இதற்கிடையே, போலீஸ் அதிகாரி பல்பீர் சிங் மூலம் பாதிப்புக்குள்ளான பலரும் தற்போது வெளிப்படையாகப் பேசுவதற்கு முன்வருவதால் இந்த விவகாரம் சர்ச்சையாகிவருகிறது.