Published:Updated:

திருவள்ளூர்: மது போதையில் தகராறு; இளைஞரை அடித்துக் கொலைசெய்த கும்பல் - போலீஸ் விசாரணை!

கொலை
News
கொலை ( மாதிரிப் படம் )

திருவள்ளூர் மாவட்டத்தில் போதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் அடித்து கொலைசெய்யப்பட்டார்.

Published:Updated:

திருவள்ளூர்: மது போதையில் தகராறு; இளைஞரை அடித்துக் கொலைசெய்த கும்பல் - போலீஸ் விசாரணை!

திருவள்ளூர் மாவட்டத்தில் போதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் அடித்து கொலைசெய்யப்பட்டார்.

கொலை
News
கொலை ( மாதிரிப் படம் )

திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையைச் சேர்ந்தவர் பூபதிராஜா (45). இவர் சிறு சிறு குற்ற வழக்குகளில் சிக்கி, அடிக்கடி சிறைக்குச் செல்வது வழக்கம். இந்த நிலையில், நேற்றிரவு திருமழிசை முத்துராஜா தெருவில் பூபதிராஜா மது போதையில் பைக்கில் வந்திருக்கிறார்.

அப்போது அங்கு சில இளைஞர்கள் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் போதையில் இருந்திருக்கிறார்கள். இதையடுத்து, பூபதிராஜாவுக்கும் இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஆத்திரமடைந்த இளைஞர்கள் பூபதிராஜாவைக் கட்டையால் தாக்கியிருக்கிறார்கள். பின்னர் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

கொலை
கொலை
representational image

மயங்கிக்கிடந்த பூபதிராஜாவை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், பூபதிராஜா ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து வெள்ளவேடு காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் பூபதிராஜாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் கொலை வழக்கு பதிவுசெய்த போலீஸார், ஐந்து இளைஞர்களைத் தேடிவருகிறார்கள்.