Published:Updated:

‘கால் அமுக்கிவிடச் சொல்றாங்க!’ - ஜூனியர் மாணவர்களுக்கு சாட்டையடி; 9 சீனியர் மாணவர்கள் சஸ்பெண்ட்!

ராகிங் காட்சி
News
ராகிங் காட்சி

செய்யாறு அரசுக் கல்லூரி விடுதியில், ஜூனியர் மாணவர்களுக்கு சாட்டையடி கொடுத்து கொடுமைப்படுத்திவந்த சீனியர் மாணவர்கள் ஒன்பது பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

Published:Updated:

‘கால் அமுக்கிவிடச் சொல்றாங்க!’ - ஜூனியர் மாணவர்களுக்கு சாட்டையடி; 9 சீனியர் மாணவர்கள் சஸ்பெண்ட்!

செய்யாறு அரசுக் கல்லூரி விடுதியில், ஜூனியர் மாணவர்களுக்கு சாட்டையடி கொடுத்து கொடுமைப்படுத்திவந்த சீனியர் மாணவர்கள் ஒன்பது பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ராகிங் காட்சி
News
ராகிங் காட்சி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியிலுள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் படிக்கும் ஜூனியர் மாணவர்களை வரிசையாக நிற்கவைத்து, கயிற்றால் பின்னப்பட்ட சாட்டையால், சீனியர் மாணவர்கள் அடித்து ‘ராகிங்’ செய்த வீடியோ காட்சிகள் வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்தத் துன்புறுத்தல் செயல், கல்லூரியின் ஆதிதிராவிடர் நல விடுதிக்குள் நடந்திருக்கிறது. வீடியோ வெளியானதையடுத்து, பாதிக்கப்பட்ட ஜூனியர் மாணவர்களும் வெளிப்படையாகக் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் வாசித்திருக்கிறார்கள். அவர்கள் கூறிய தகவல்கள் அனைத்தும் அதிர்ச்சி ரகம்.

ராகிங் காட்சி
ராகிங் காட்சி

‘‘சீனியர் மாணவர்களை ‘சார், சார்...’ என்றுதான் அழைக்க வேண்டும். அப்படி மரியாதையாக அழைக்கவில்லையென்றால், அடிக்கிறார்கள். அவர்கள் சாப்பிட்ட தட்டை நாங்கள்தான் கழுவிக்கொடுக்க வேண்டும். அவர்களின் துணிகளையும் நாங்கள்தான் துவைத்துத் தர வேண்டும். அதுமட்டுமின்றி, இரவில் அவர்களுக்குக் கால் அமுக்கிவிட வேண்டும். அவர்களுக்கு பணிவிடைச் செய்ய மறுத்தால், இரவு முழுவதும் தூங்கவிடாமல் செய்வார்கள். அறைக்குள் இருக்கும் சிலாப்பைப் பிடித்துத் தொங்கிக்கொண்டே இருக்க வேண்டும். மன்னிப்புக் கேட்டாலும், அவர்களாக இரக்கப்பட்டு ‘இறங்கு’ என்று சொன்னால்தான் சிலாப்பிலிருந்து இறங்க வேண்டும். தினமும் இப்படித்தான் கொடுமைப்படுத்துகிறார்கள்’’ என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இதையடுத்து, கல்லூரி நிர்வாகம், புகாருக்குள்ளான ஒன்பது சீனியர் மாணவர்களை ஒரு மாதம் சஸ்பெண்ட் செய்து, உத்தரவிட்டிருக்கிறது. இது தொடர்பாகக் கல்லூரி முதல்வர் கலைவாணி வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ‘‘ராகிங் தொடர்பான புகாரின் அடிப்படையில், ராகிங் தடுப்புக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்களின் விசாரணையில், ‘புகாரில் முகாந்திரம்’ இருப்பது தெரியவந்திருக்கிறது.

கல்லூரி முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு
கல்லூரி முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு

இதை மேலும் விசாரணை செய்யும் பொருட்டு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் தொலைபேசி செய்திக்கிணங்கவும், அறிவுறுத்தலுக்கிணங்கவும் கல்லூரி ஆட்சிமன்றக்குழுத் தீர்மானத்தின்படி ஒன்பது மாணவர்களும் ஒரு மாத காலத்துக்குத் தற்காலிக இடை நீக்கம் செய்யப்படுகிறார்கள். இந்த மாணவர்கள், கல்லூரி மற்றும் விடுதிக்குள் வரக் கூடாது எனவும் அறிவுறுத்தப்படுகிறது’’ எனத் தெரிவித்திருக்கிறார். சமீபத்தில், வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரி விடுதியில், ஜூனியர் மாணவர்கள் பலரையும் உள்ளாடையுடன் சுற்றிவரச் செய்த சீனியர் மாணவர்களின் ‘ராகிங்’ வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.