Published:Updated:

உ.பி: கூட்டுப் பாலியல் வன்கொடுமை; பாதிக்கப்பட்ட பட்டியலினச் சிறுமி;வீட்டுக்குத் தீவைத்த குற்றவாளிகள்

பாலியல் வன்கொடுமை
News
பாலியல் வன்கொடுமை ( சித்திரிப்பு படம் )

``பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜாமீனில் வெளிவந்திருப்பவர்கள் இந்தச் சம்பவத்தை நிகழ்த்தியிருக்கின்றனர்.'' - காவல்துறை

Published:Updated:

உ.பி: கூட்டுப் பாலியல் வன்கொடுமை; பாதிக்கப்பட்ட பட்டியலினச் சிறுமி;வீட்டுக்குத் தீவைத்த குற்றவாளிகள்

``பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜாமீனில் வெளிவந்திருப்பவர்கள் இந்தச் சம்பவத்தை நிகழ்த்தியிருக்கின்றனர்.'' - காவல்துறை

பாலியல் வன்கொடுமை
News
பாலியல் வன்கொடுமை ( சித்திரிப்பு படம் )

உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தின் அருகிலிருக்கும் ஒரு கிராமத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு 11 வயது சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகாரளிக்கப்பட்டது. அந்தச் சிறுமி பட்டியலினத்தைச் சேர்ந்தவர். இது தொடர்பான வழக்கில் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

தீ
தீ
Representational Image

இதற்கிடையே பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் வன்கொடுமையால் கருவுற்று, ஓர் ஆண் குழந்தையையும் பிரசவித்திருக்கிறார். இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. இதில் குற்றம்சாட்டப்பட்ட மூவரில், இருவருக்கு ஜாமீன் கிடைத்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தாரிடம் வழக்கை வாபஸ் பெற வற்புறுத்தி வந்திருக்கின்றனர்.

சில நேரம் மிரட்டவும் செய்திருக்கின்றனர். இந்த நிலையில்தான் ஜாமீனில் வெளியே வந்த இரண்டு குற்றவாளிகளும் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டுக்குத் தீ வைத்திருக்கின்றனர். இதில், சிறுமியின் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியின் ஆறு மாத ஆண் குழந்தையும், சிறுமியின் சகோதரியான இரண்டு மாத குழந்தையும் தீக்காயத்துடன் மீட்கப்பட்டு அருகிலிருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இரண்டு குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

போலீஸ்
போலீஸ்

இந்தச் சம்பவம் குறித்த காவல்துறையின் விசாரணையில், "பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜாமீனில் வெளிவந்திருப்பவர்கள் இந்தச் சம்பவத்தை நிகழ்த்தியிருக்கின்றனர். அவர்களுக்கு பாதிக்கப்பட்ட சிறுமியின் தாத்தாவும், சிறுமியின் மாமாவும் உதவியிருப்பது தெரியவந்திருக்கிறது. அதற்கான காரணம் குறித்து இன்னும் முழுமையான தகவல் கிடைக்கவில்லை. மேலும், விசாரணை நடந்துவருகிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.