Published:Updated:

திருப்பூர்: `புற்றுநோய் மருந்துக்கான மூலப்பொருள்' - பனியன் நிறுவன உரிமையாளரிடம் ரூ.98 லட்சம் மோசடி!

கைதான நான்கு பேர்
News
கைதான நான்கு பேர்

மூளைப் புற்றுநோய்க்கான மூலப்பொருளை வாங்கித் தந்தால், அதிகப்படியான கமிஷன் தொகை தருவதாகக் கூறி, திருப்பூர் பனியன் நிறுவன உரிமையாளரிடம் ரூ.98.28 லட்சம் மோசடி செய்த நான்கு பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

Published:Updated:

திருப்பூர்: `புற்றுநோய் மருந்துக்கான மூலப்பொருள்' - பனியன் நிறுவன உரிமையாளரிடம் ரூ.98 லட்சம் மோசடி!

மூளைப் புற்றுநோய்க்கான மூலப்பொருளை வாங்கித் தந்தால், அதிகப்படியான கமிஷன் தொகை தருவதாகக் கூறி, திருப்பூர் பனியன் நிறுவன உரிமையாளரிடம் ரூ.98.28 லட்சம் மோசடி செய்த நான்கு பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

கைதான நான்கு பேர்
News
கைதான நான்கு பேர்

திருப்பூரைச் சேர்ந்த பனியன் ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் சிவகுமார். இவருக்குக் கடந்த மார்ச் 22-ம் தேதி வாட்ஸ்அப் எண்ணுக்கு வெளிநாட்டு எண்ணிலிருந்து குறுந்தகவல் வந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, வாட்ஸ்அப் மூலம் சிவகுமாரைத் தொடர்புகொண்ட நபர், மூளைப் புற்றுநோய்க்கு மருந்து தயாரிப்பதற்கான மூலப்பொருள் இமாச்சல பிரதேசத்திலிருந்து தாங்கள் வாங்கி வந்ததாகவும், தற்போது அங்குள்ள நபரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால், அந்த மூலப்பொருள்களை வாங்கி தங்களுக்கு அனுப்பிவைத்தால் அதற்கான கமிஷன் தொகையைத் தருவதாகக் கூறியிருக்கிறார்.

police
police

இதை நம்பிய சிவகுமார் புற்றுநோய் மருத்துக்கான மூலப்பொருள்கள் வாங்க அவர்கள் கூறிய வங்கிக் கணக்குக்கு பல தவணையாக மொத்தம் ரூ.98 லட்சத்து 28 ஆயிரத்தைச் செலுத்தியிருக்கிறார். நீண்டநாள்களாகியும், மூலப்பொருள் வராததால், அது குறித்து திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீஸில் சிவகுமார் புகாரளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவுசெய்த போலீஸார், முதற்கட்டமாக சிவகுமார் பணம் செலுத்திய வங்கிக் கணக்கிலிருந்த ரூ. 5 லட்சத்து 83 ஆயிரத்தை முடக்கினர். இதையடுத்து, ஆய்வாளர் சொர்ணவல்லி தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ரஜினிகாந்த், காவலர்கள் நவீன் கிருஷ்ணன், தனலட்சுமி, தங்கபாண்டி, ஹரிஹரசுதன், கருணாசாகர் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

மேலும், உதவி ஆய்வாளர் சையது ரபிக் சிக்கந்தர் தலைமையில் காவலர்கள் சத்தியேந்திரன், நவீன் குமார், சாதிக்பாட்சா ஆகியோர் கொண்ட மற்றொரு தனிப்படை அமைக்கப்பட்டு மும்பை, டெல்லி பகுதிகளில் முகாமிட்டு விசாரணை நடத்தினர். அதில், கடந்த 19-ம் தேதி மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ரமேஷ் விதாந்தே என்பவரை மும்பையில் வைத்து கைதுசெய்தனர். பின்னர், கடந்த 20-ம் தேதி டெல்லியில் தங்கியிருந்த நைஜீரியாவைச் சேர்ந்த ஜேம்ஸ் ஓசே போஹின் லாரன்ஸ், உகாண்டா நாட்டைச் சேர்ந்த பெண்ணான நசபா சரோம், மேற்கு டெல்லியைச் சேர்ந்த முகேஷ் குமார் மிஸ்ரா என்பவரையும் தனிப்படை போலீஸார் கைதுசெய்தனர்.

சித்தரிப்பு படம்
சித்தரிப்பு படம்

விசாரணையில், இவர்கள் நான்கு பேரும் சேர்ந்து குழுவாகச் செயல்பட்டுவந்ததாகவும், வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்டு இது போன்று மோசடிகளில் ஈடுபடுவதும் தெரியவந்தது. அதன்படி, சிவகுமாரைத் தொடர்புகொண்டு ஆசைவார்த்தைக் கூறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 24 செல்போன்கள், 8 சிம் கார்டுகள், இரண்டு மடிக்கணினிகள், மோடம், ஏடிஎம் கார்டுகள், 2 பாஸ்போர்ட்டுகள், ரூ. 28 ஆயிரம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.