Published:Updated:

கல்குவாரி ஆய்வுக்குச் சென்ற இடத்தில், கடத்தல் குடோன் கண்டுபிடிப்பு - 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

கடத்தல் குடோன்
News
கடத்தல் குடோன்

ராஜபாளையம் அருகே கல்குவாரியை ஆய்வுச்செய்யச் சென்ற இடத்தில், ரேஷன் அரிசிக் கடத்தல் குடோனை வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இது குறித்து போலீஸார்‌ விசாரணை நடத்திவருகின்றனர்.

Published:Updated:

கல்குவாரி ஆய்வுக்குச் சென்ற இடத்தில், கடத்தல் குடோன் கண்டுபிடிப்பு - 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

ராஜபாளையம் அருகே கல்குவாரியை ஆய்வுச்செய்யச் சென்ற இடத்தில், ரேஷன் அரிசிக் கடத்தல் குடோனை வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இது குறித்து போலீஸார்‌ விசாரணை நடத்திவருகின்றனர்.

கடத்தல் குடோன்
News
கடத்தல் குடோன்

ராஜபாளையம் அருகே மேலூர் துரைச்சாமியாபுரம் கிராமத்தில் புத்தூர் மலைப்பகுதியில் அரசு அனுமதிபெற்ற கல்குவாரி இயங்கிவருகிறது. இங்கு இரவு நேரங்களில் சட்டவிரோதமாகக் கற்கள் கொண்டு செல்லப்படுவதாக வருவாய்த்துறைக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து கல்குவாரியில் ஆய்வு செய்வதற்காக இரவு 8:30 மணி அளவில் சிவகாசி வருவாய்க் கோட்டாட்சியர் விஸ்வநாதன் தலைமையிலான அதிகாரிகள் அந்தப் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குவாரியிலிருந்து இரவு நேரத்தில் கற்கள் ஏற்றிவந்த லாரியை வருவாய்துறை அதிகாரிகள் மடக்கிப்பிடித்தனர்.

பறிமுதல்
பறிமுதல்

அப்போது அதிகாரிகள் லாரியை நிறுத்தி சோதனையிடுவதைக் கண்ட சிலர் லோடு ஆட்டோவை நிறுத்திவிட்டு தப்பி ஓடினர். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் லோடு ஆட்டோவைச் சோதனையிட்ட போது அதில் 35 மூட்டைகளில் ரேஷன்அரிசி கடத்திவந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அந்தப் பகுதியில் விசாரணை நடத்துகையில், அந்தப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான குடோனில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள், குடோனில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனையில், குடோனில் மொத்தம் 250 மூட்டைகளில் சுமார் 15 டன் ரேஷன் அரிசி சட்டவிரோதமாகப் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 285 ரேஷன் அரிசி மூட்டைகள், கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனம் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை லாரி மூலம் தளாவாய்புரம் காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.

தொடர்ந்து, 15 டன் ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்திய லோடு ஆட்டோ ஆகியவை விருதுநகர் மாவட்ட உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த ஆய்வின்போது வட்டாட்சியர் ராமச்சந்திரன், வட்ட வழங்கல் அலுவலர் சோமசுந்தரம், மண்டலத் துணை வட்டாட்சியர் கோதண்டராமன், வருவாய்த்துறையினர் ஆகியோர் உடனிருந்தனர். ரேஷன் அரிசி மூட்டைகளைப் பதுக்கிவைத்திருந்த குடோன் உரிமையாளர், ரேஷன் அரிசியைக் கடத்தியவர்கள் யார் யார் என்பது குறித்து தளவாய்புரம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.