Published:Updated:

சென்னை: போலீஸ் சீருடையில் ஹவாலா பணத்தை வழிப்பறி செய்த காவலர் - சிக்கியது எப்படி?!

ஹவாலா பணம்
News
ஹவாலா பணம்

ஹவாலா பணத்தை வழிப்பறி செய்த வழக்கில் சென்னை ஆயுதப்படை காவலர் ஒருவரை போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள்.

Published:Updated:

சென்னை: போலீஸ் சீருடையில் ஹவாலா பணத்தை வழிப்பறி செய்த காவலர் - சிக்கியது எப்படி?!

ஹவாலா பணத்தை வழிப்பறி செய்த வழக்கில் சென்னை ஆயுதப்படை காவலர் ஒருவரை போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள்.

ஹவாலா பணம்
News
ஹவாலா பணம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அழகுராஜா. இவர் மலேசியாவில் வேலை பார்த்துவருகிறார். கள்ளக்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழகுராஜா சென்னைக்கு வந்தார். பிறகு பேருந்து மூலம் கள்ளக்குறிச்சிக்குச் செல்ல திட்டமிட்ட அவர், சென்னை அண்ணாசாலைக்கு வந்திருக்கிறார். அப்போது புதுப்பேட்டை ஆயுதப்படையில் பணியாற்றும் காவலர் செந்தில், அவரின் நண்பர் ஒருவர் ஆகியோர் அழகுராஜாவை வழிமறித்து விசாரித்திருக்கிறார்கள். அப்போது அழகுராஜாவிடம் பணம் இருப்பதைக் கண்டறிந்த காவலர் செந்தில், அதற்குரிய ஆவணங்களைக் கேட்டிருக்கிறார்.

போலீஸ்
போலீஸ்

மேலும் அழகுராஜா வைத்திருந்த உடைமைகளையும் காவலர் செந்தில் சோதனை செய்திருக்கிறார். சோதனையில் அழகுராஜாவிடம் 30 லட்சம் ரூபாய் இருப்பது தெரியவந்திருக்கிறது. உடனடியாக அழகுராஜாவை அழைத்துக்கொண்டு காவலர் செந்திலும் அவரின் நண்பரும் காவல் நிலையத்துக்கு செல்வதாகக் கூறியிருக்கிறார்கள். அவர்களோடு அழகுராஜாவும் காரில் சென்றிருக்கிறார். செல்லும் வழியில் அழகுராஜாவை நைசாகப் பேசி கீழே இறக்கிவிட்ட இருவரும் தப்பித்துச் சென்றுவிட்டனர். இதையடுத்து அழகுராஜா, எஸ்பிளானேடு காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அதைத் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தினர். சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் காரின் பதிவு நம்பர் அடிப்படையில் விசாரித்தனர். விசாரணையில் 30 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்தது காவலர் செந்திலும் அவரின் நண்பரும் எனத் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து காவலர் செந்திலைப் பிடித்து போலீஸார் விசாரித்துவருகிறார்கள். அவரின் நண்பரை போலீஸார் தேடிவருகிறார்கள்.

கைது
கைது

இதுகுறித்து எஸ்பிளானேடு போலீஸார் கூறுகையில், ``புகாரளித்த அழகுராஜாவிடம் 30 லட்சம் ரூபாய் பணம் குறித்து விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவிக்கிறார். அதனால் அவர் ஹவாலா பணத்தைக் கொண்டு செல்லும் குருவியாக இருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது. அழகுராஜா, பணத்தைக் கொண்டு செல்லும் தகவலையறிந்த காவலர் செந்திலும் அவரின் நண்பர் டைசனும் போலீஸார் சீருடையில் அழகுராஜாவை வழிமறித்து இந்தச் சம்பத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். காவலர் செந்தில், டைசனைக் கைதுசெய்திருக்கிறோம். இந்தக் குற்றச் சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யாரென்று விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.