Published:Updated:

சென்னை: மது போதையில் தகராறு... கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொல்லப்பட்ட பிரபல ரௌடி!

கொலை
News
கொலை

முன்விரோதம் காரணமாக பிரபல ரௌடி சென்னையில் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:

சென்னை: மது போதையில் தகராறு... கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொல்லப்பட்ட பிரபல ரௌடி!

முன்விரோதம் காரணமாக பிரபல ரௌடி சென்னையில் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்.

கொலை
News
கொலை

சென்னை, கண்ணகி நகரைச் சேர்ந்தவர் நித்தியா(எ) பல்லு நித்தியா. இவர் பழைய மகாபலிபுரம் சாலை, காரப்பாக்கம் இந்திரா காந்தி முதல் குறுக்குத் தெருவில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். அதைப் பார்த்தவர்கள், ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கண்ணகி நகர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட நித்யா உயிரிழந்தார். இதையடுத்து, கண்ணகி நகர் போலீஸார் விசாரணை நடத்தியதில் நித்யா, பிரபல ரௌடி எனத் தெரியவந்தது.

நித்யா
நித்யா

சம்பவத்தன்று நித்யா தன்னுடைய கூட்டாளிகள், நண்பர்களுடன் மது அருந்தியிருக்கிறார். அப்போது ஏற்பட்ட தகராறில் நித்யா கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலைசெய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. அதனால், நித்யாவுடன் மது அருந்தியவர்கள் யார் என்று போலீஸார் விசாரித்தனர்.

விசாரணையில் கண்ணகி நகரைச் சேர்ந்த வீரமருது என்பவர் நித்யாவுடன் மது அருந்தியது தெரியவந்தது. அதனால் வீரமருதுவைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். அப்போது முன்விரோதம் காரணமாக நித்யாவை வீரமருது தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து அடித்துக் கொலைசெய்தது தெரியவந்தது. அதனால் இந்த வழக்கில் தலைமறைவாக இருப்பவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

கொலை
கொலை

இது குறித்து கண்ணகி நகர் போலீஸார் நம்மிடம் பேசுகையில், ``வீரமருதுவின் வீட்டை நித்யா, அவரின் கூட்டாளிகள் அடித்து உடைத்து சேதப்படுத்தியிருக்கிறார்கள். அதனால், நித்யா மீது ஆத்திரத்தில் இருந்திருக்கிறார் வீரமருது. இதையடுத்து, நித்யாவை மது அருந்த அழைத்துக் கொலைசெய்தது தெரியவந்திருக்கிறது. நித்யா கொலை வழக்கில் வீரமருதுவைக் கைதுசெய்திருக்கிறோம். கைதான வீரமருதுவும் பிரபல ரௌடி. தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.