Published:Updated:

கல்விக் கடன் வழங்கியதில் ரூ.34 லட்சம் கையாடல்; ஆன்லைன் ரம்மியில் `பெட்டிங்’... வங்கி அதிகாரி கைது!

யோகேஸ்வர பாண்டியன்
News
யோகேஸ்வர பாண்டியன்

எஸ்.பி.ஐ வங்கியில், கல்விக் கடனுக்கு விண்ணப்பித்த 137 மாணவர்களின் பெயர்களில், ரூ.34 லட்சம் பணத்தைக் கையாடல் செய்து, ஆன்லைன் ரம்மியில் `பெட்டிங்’ கட்டி விளையாடிய உதவி மேலாளரை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:

கல்விக் கடன் வழங்கியதில் ரூ.34 லட்சம் கையாடல்; ஆன்லைன் ரம்மியில் `பெட்டிங்’... வங்கி அதிகாரி கைது!

எஸ்.பி.ஐ வங்கியில், கல்விக் கடனுக்கு விண்ணப்பித்த 137 மாணவர்களின் பெயர்களில், ரூ.34 லட்சம் பணத்தைக் கையாடல் செய்து, ஆன்லைன் ரம்மியில் `பெட்டிங்’ கட்டி விளையாடிய உதவி மேலாளரை போலீஸார் கைதுசெய்தனர்.

யோகேஸ்வர பாண்டியன்
News
யோகேஸ்வர பாண்டியன்

வேலூர், காட்பாடி காந்தி நகரிலுள்ள எஸ்.பி.ஐ வங்கியில், 38 வயதான யோகேஸ்வர பாண்டியன் என்பவர் உதவி மேலாளராகப் பணிபுரிந்துவருகிறார். இவர், வீட்டுக் கடன் மற்றும் மாணவர்களுக்கான கல்விக் கடன் வழங்கியதில், மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, 2018 ஜூலை மாதம் முதல் 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை கல்விக் கடன் வாங்கியவர்கள், செலுத்தியவர்களின் கணக்குகளை வங்கி நிர்வாகம் தணிக்கைக்கு உட்படுத்தியது. தணிக்கைச் செய்ததில், 137 மாணவர்களின் கல்விக் கடனை யோகேஸ்வர பாண்டியன் முறைகேடாகத் தனது கணக்குக்கு மாற்றி, மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

யோகேஸ்வர பாண்டியன்
யோகேஸ்வர பாண்டியன்

பொதுவாகவே, மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக் கடனை டி.டி எடுத்து, எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸில் செலுத்த வேண்டும். இதுதான் வங்கி நடைமுறை. அப்படியிருக்க, 137 மாணவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட 34,10,622 ரூபாயை கையாடல் செய்து, ‘பெட்டிங்’ கட்டி ஆன்லைன் ரம்மி விளையாடியிருப்பதும் தெரியவந்தது.

இதுபற்றி, வங்கி நிர்வாகம் தரப்பில் வேலூர் எஸ்.பி ராஜேஸ்கண்ணனிடம் புகாரளிக்கப்பட்டது. எஸ்.பி உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவுசெய்து, யோகேஸ்வர பாண்டியனைக் கைதுசெய்து விசாரணை நடத்தினர். விசாரணையின்போது அவர், ‘‘ஆன்லைன் ரம்மியில் `பெட்டிங்’ கட்டி பணத்தை இழந்ததால், கல்விக் கடனைக் கொண்டு ஈடுகட்ட முடிவுசெய்தேன். ஆனால், அந்தப் பணத்தையும் இழந்துவிட்டேன்’’ என்று கூறியிருக்கிறார். இதையடுத்து, யோகேஸ்வர பாண்டியனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.