Published:Updated:

மும்பை: சோனு நிகம் தந்தை வீட்டில் ரூ.72 லட்சம் திருட்டு - முன்னாள் டிரைவரைத் தேடும் போலீஸ்

தந்தையுடன் சோனு நிகம்
News
தந்தையுடன் சோனு நிகம்

பாலிவுட் பாடகர் சோனு நிகமின் தந்தை வீட்டில் ரூ.72 லட்சம் திருட்டுப் போயிருக்கிறது.

Published:Updated:

மும்பை: சோனு நிகம் தந்தை வீட்டில் ரூ.72 லட்சம் திருட்டு - முன்னாள் டிரைவரைத் தேடும் போலீஸ்

பாலிவுட் பாடகர் சோனு நிகமின் தந்தை வீட்டில் ரூ.72 லட்சம் திருட்டுப் போயிருக்கிறது.

தந்தையுடன் சோனு நிகம்
News
தந்தையுடன் சோனு நிகம்

பாலிவுட் பாடகர் சோனு நிகமின் தந்தை அகம்குமார் நிகம் மும்பை ஓசிவாராவிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவருகிறார். அகம்குமார் வெளியில் சென்றிருந்தபோது ரூ.72 லட்சம் திருட்டுப்போயிருக்கிறது. இந்தத் திருட்டுக்குப் பூட்டு உடைக்கப்படவில்லை. அதனால் தெரிந்த யாரோதான் கள்ளச்சாவி மூலம் லாக்கரைத் திறந்து பணத்தைத் திருடியிருக்க வேண்டும் என்று அகம்குமார் நினைத்தார். அதன்படி அவர் வசித்த கட்டடத்துக்கு வெளியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, அகம் குமாரிடம் சில மாதங்கள் டிரைவராக இருந்தவர், கட்டடத்திலிருந்து ஒரு பேக்குடன் செல்வது பதிவாகியிருந்தது.

ரேஹன் என்பவரை அகம்குமார் எட்டு மாதங்கள் டிரைவராக வைத்திருந்தார். ஆனால் அவரின் செயல்பாடுகள் சரியில்லாததால் அகம்குமார் அவரை வேலையைவிட்டு நீக்கிவிட்டார். அவர்தான் பணத்தை திருடியிருக்க வேண்டும் என்று கருதி அகம்குமாரின் மகள் நிகிதா போலீஸில் புகார் செய்திருக்கிறார்.

தந்தையுடன் சோனு நிகம்
தந்தையுடன் சோனு நிகம்

இது தொடர்பாக அவர் கொடுத்திருக்கும் புகாரில், ``என் தந்தை, என் வீட்டுக்கு வந்துவிட்டுத் திரும்பிச் சென்றபோது வீட்டிலிருந்த 40 லட்சம் ரூபாய் காணாமல்போயிருந்தது. அடுத்த நாள் என் தந்தை, என்னுடைய சகோதரனின் வீட்டுக்கு வந்துவிட்டுச் சென்றபோது மீண்டும் லாக்கரிலிருந்து ரூ.32 லட்சம் காணாமல்போயிருந்தது. இரண்டு திருட்டிலும் லாக்கர் எந்தவிதச் சேதமும் அடையவில்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும், முன்னாள் டிரைவர் ரேஹன் என் தந்தை வீட்டில் இல்லாத நேரத்தில் போலிச் சாவியைப் பயன்படுத்தி, ரூ.72 லட்சத்தைத் திருடியிருக்கிறார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர். ரேஹன் டிரைவராக வேலை செய்தபோது ஒரிஜினல் சாவிக்கு மாற்றுச் சாவி தயாரித்து, அதன் மூலம் இந்தத் திருட்டை நடத்தியிருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. பணத்துடன் தலைமறைவான ரேஹனை போலீஸார் தேடிவருகின்றனர்.