Published:Updated:

குடும்பத்துடன் விபரீத முடிவெடுத்த சித்த மருத்துவர்; கடன் தொல்லை காரணமா? - போலீஸ் விசாரணை!

தற்கொலை
News
தற்கொலை

சென்னையில் சித்த மருத்துவர், அவரின் குடும்பத்தினரோடு தற்கொலை செய்துகொள்ள முடிவுசெய்தார். இதில் சித்த மருத்துவரும், அவரின் மகளும் உயிரிழந்தனர். சித்த மருத்துவரின் மனைவி உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது.

Published:Updated:

குடும்பத்துடன் விபரீத முடிவெடுத்த சித்த மருத்துவர்; கடன் தொல்லை காரணமா? - போலீஸ் விசாரணை!

சென்னையில் சித்த மருத்துவர், அவரின் குடும்பத்தினரோடு தற்கொலை செய்துகொள்ள முடிவுசெய்தார். இதில் சித்த மருத்துவரும், அவரின் மகளும் உயிரிழந்தனர். சித்த மருத்துவரின் மனைவி உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது.

தற்கொலை
News
தற்கொலை

சென்னை சாலிகிராமம், திலகர் தெருவிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவந்தவர் கங்காதரன் (60), சித்த மருத்துவர். இவரின் மனைவி சாருமதி (57), நெடுஞ்சாலைதுறையில் அதிகாரியாக வேலை பார்த்துவந்தார். இந்தத் தம்பதியின் மகள் ஜனபிரியா (24). டிகிரி படித்திருக்கிறார். இவர், தன்னுடைய உறவினரான ஹேமலதா என்பவருக்கு எஸ்.எம்.எஸ் ஒன்று அனுப்பியிருந்தார். அதில், ``நாங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளப்போகிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தார். அதைப் படித்த ஹேமலதா அதிர்ச்சியடைந்தோடு உடனடியாக கங்காதரன் வீட்டுக்கு வந்தார்.

தற்கொலை
தற்கொலை

வீட்டுக்குள் கங்காதரன், சாருமதி, ஜனபிரியா ஆகிய மூன்று பேரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். அருகில் தூக்க மாத்திரை அட்டைகள் சிதறிக் கிடந்தன. உடனடியாக அவர்களை மீட்டு வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு ஹேமலதாவும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும் கொண்டுசென்றனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி கங்காதரன், ஜனபிரியா ஆகியோர் இறந்தனர். சாருமதிக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இது குறித்து தகவலறிந்ததும் விருகம்பாக்கம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். கங்காதரன், ஜனபிரியா ஆகியோரின் சடலங்களைமீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்துப் பேசிய போலீஸார், ``எங்களின் முதற்கட்ட விசாரணையில் தற்கொலை செய்துகொண்ட கங்காதரனுக்கு கடன் தொல்லை இருந்தது தெரியவந்திருக்கிறது. அதனால்தான் குடும்பத்துடன் அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்திவருகிறோம். சம்பவத்தன்று இரவு கங்காதரன், அவரின் மனைவி சாருமதி, மகள் ஜனபிரியா ஆகியோர் அதிக அளவில் தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டிருக்கிறார்கள். அப்பாவும், அம்மாவும் மயங்கிய நிலையில் ஜனபிரியா, தன்னுடைய செல்போனில் உறவினர் ஒருவருக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தகவலைத் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகே கங்காதரன் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்த தகவல் வெளியில் தெரியவந்திருக்கிறது.

எஸ்.எம்.எஸ்
எஸ்.எம்.எஸ்

இந்தச் சம்பவத்தில் கங்காதரனும், ஜனபிரியாவும் உயிரிழந்துவிட்டனர். தற்போது சிகிச்சை பெற்றுவரும் சாருமதியிடம் விசாரித்தால் மட்டுமே தற்கொலை முடிவுக்கான காரணம் தெரியவரும். கங்காதரன் வீட்டின் அருகில் வசிப்பவர்களிடம் விசாரித்தபோது, கங்காதரன் குடும்பம் யாரிடம் அதிகம் பேசமாட்டார்கள் எனத் தெரியவந்தது. மேலும் டிகிரி படித்த ஜனபிரியா, வேலைக்குச் செல்லாமல் வீட்டில்தான் இருந்துவந்திருக்கிறார். அதனால் இந்தக் குடும்பத்தினரின் தற்கொலை முடிவு குறித்து இப்போதைக்கு எதுவும் தெரியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம்" என்றனர்.