Published:Updated:

``ஜாக்குலினுடன் பழகியதால், நோரா பொறாமைப்பட்டார்; என்னைக் காதலிக்க விரும்பினார்!" - சுகேஷ் விளக்கம்

சுகேஷ்  - நோரா
News
சுகேஷ் - நோரா

``நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுடன் பழகுவதைக் கைவிடும்படி நடிகை நோரா பதேஹி என்னிடம் கேட்டுக்கொண்டே இருந்தார்." - சுகேஷ் சந்திரசேகர்

Published:Updated:

``ஜாக்குலினுடன் பழகியதால், நோரா பொறாமைப்பட்டார்; என்னைக் காதலிக்க விரும்பினார்!" - சுகேஷ் விளக்கம்

``நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுடன் பழகுவதைக் கைவிடும்படி நடிகை நோரா பதேஹி என்னிடம் கேட்டுக்கொண்டே இருந்தார்." - சுகேஷ் சந்திரசேகர்

சுகேஷ்  - நோரா
News
சுகேஷ் - நோரா

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபரை சிறையிலிருந்து வெளியில் எடுப்பதாகக் கூறி, அவருடைய மனைவியிடம் ரூ.200 கோடி பறித்தது தொடர்பாக கைதுசெய்யப்பட்டிருக்கும் சுகேஷ் சந்திரசேகர் தற்போது டெல்லி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். சுகேஷ் மிரட்டி சம்பாதித்த பணத்தில் பாலிவுட் நடிகைகளுக்குத் தாராளமாகச் செலவு செய்திருக்கிறார். குறிப்பாக, திகார் சிறையில் இருந்துகொண்டே நடிகைகளுடன் போனில் பேசுவது, அவர்களைச் சிறைக்கு வரவழைத்துப் பேசுவது, அவர்களுக்குப் பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவது எனப் பல வழிகளில் பணத்தைச் செலவு செய்துவந்தார். அதிகமான நடிகைகளுக்குப் பரிசுப் பொருள்களை கூரியர் மூலமாகவும் அனுப்பினார். இதில் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், நோரா ஃபதேஹி உட்பட சில நடிகைகள் அதிக அளவு பயனடைந்தனர். இது தொடர்பாக டெல்லி போலீஸார் துணைக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கின்றனர்.

நோரா ஃபதேஹி
நோரா ஃபதேஹி

அதில் நோரா ஃபதேஹி தன்னுடன் சுகேஷ் சந்திரசேகர் நட்பாக இருக்க விரும்பியதாகத் தெரிவித்திருந்தார். இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக சுகேஷ் தன்னுடைய வழக்கறிஞர் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ``நான் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுடன் பழகுவதால் நோரா ஃபதேஹி பொறாமைப்பட்டார். என்னை ஜாக்குலினிடமிருந்து விலகி, தன்னுடன் நட்பு வைத்துக்கொள்ளும்படி அடிக்கடி என்னிடம் நோரா கூறிக்கொண்டே இருந்தார். நோரா தினமும் எனக்கு 10 முறையாவது போன் செய்வது வழக்கம். நான் போனை எடுக்காவிட்டாலும் தொடர்ந்து போன் பண்ணிக்கொண்டே இருப்பார். ஜாக்குலினுடன் நட்பில் இருந்ததால் நான் நோராவை புறக்கணித்து வந்தேன். அப்படி இருந்தும் தொடர்ந்து போன் செய்து என்னை வெறுப்பேற்றிக்கொண்டிருந்தார். அதோடு தன்னுடைய உறவினர் பாப் மியூசிக் கம்பெனி வைக்க உதவும்படி என்னிடம் கேட்டுக்கொண்டார்.

அதோடு அடிக்கடி புதிய பேக், ஜூவல்லரி மாடல்களை அனுப்பி அவற்றை வாங்கிக்கொடுக்கும்படி கேட்பார். நானும் அவற்றை வாங்கிக் கொடுத்தேன். அந்த பேக்-களை இன்றுவரை பயன்படுத்துகிறார். அந்த பேக்-களுக்கு அவரிடம் பில் கேட்டுப் பாருங்கள். அவரால் தாக்கல் செய்ய முடியாது. அந்த பேக்-களின் விலை ரூ.2 கோடி இருக்கும். முதலில் அமலாக்கப் பிரிவிடம் கொடுத்த வாக்குமூலத்தை மாற்றி இப்போது பொருளாதார குற்றப்பிரிவு முன்பு தனது வாக்குமூலத்தை மாற்றிக் கூறியிருக்கிறார். மாடல்கள் நிக்கி தம்போலி, சஹத் கன்னா ஆகியோர் என்னுடன் தொழில்ரீதியான தொடர்பில் மட்டும் இருந்தனர். நான் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருந்தனர்.

அவர்களுடன் எனக்கு எந்தவித காதல் தொடர்பும் கிடையாது. ஒன்பது மாதங்களுக்கு முன்பு அமலாக்கப் பிரிவு முன்பு கொடுத்த வாக்குமூலத்தை இப்போது டெல்லி பொருளாதாரக் குற்றப்பிரிவு முன்பு முற்றிலும் மாற்றிக் கூறியிருக்கின்றனர். விளம்பரத்துக்காக இது போன்று கூறியிருக்கின்றனர். உண்மையை ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்தவித பயமும் கிடையாது. ஆனால், ஒன்பது மாதங்களுக்குப் பிறகு அவர்கள் தெரிவித்திருக்கும் வாக்குமூலம் மிகவும் வேடிக்கையானதாக இருக்கிறது. 9 மாதங்களுக்கு முன்பு கொடுத்த வாக்குமூலத்துடன் இப்போது இருவரும் கொடுத்திருக்கும் வாக்குமூலத்தை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இந்த நிமிடம் வரை அந்தப் பெண்களிடம் கண்ணியத்தையும், மரியாதையையும் கடைப்பிடித்துவருகிறேன்.

ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் - சுகேஷ் சந்திரசேகர்
ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் - சுகேஷ் சந்திரசேகர்

நான் மிகவும் கீழ்த்தரமான நிலைக்குச் செல்ல விரும்பவில்லை. அவர்களுடனான சாட்டிங், ஸ்கிரீன் ஷாட் போன்றவை உண்மையைச் சொல்லும். துணைக் குற்றப்பத்திரிகையில் நடிகைகள் தெரிவித்திருக்கும் வாக்குமூலத்தை ஏற்கெனவே மீடியாவில் வெளியான வாக்குமூலத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தாலே உண்மைத்தன்மையை உணர முடியும். சாட்சிகள் என்று கூறப்படும் நடிகைகள் பொய் சொல்கின்றனர். அவர்கள் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர்" என்று தெரிவித்திருக்கிறார் சுகேஷ்.