Published:Updated:

சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்று புதைத்த வழக்கு:சாகும்வரை சிறைத் தண்டனை விதித்த நீதிமன்றம்

விழுப்புரம் நீதிமன்றம்
News
விழுப்புரம் நீதிமன்றம்

பெற்றோருடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, அவர்களுடைய 12 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கரும்புத் தோட்டத்தில் புதைத்த நபரை, இயற்கை மரணம் ஏற்படும் வரை சிறையில் அடைக்கும்படி விழுப்புரம் போச்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

Published:Updated:

சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்று புதைத்த வழக்கு:சாகும்வரை சிறைத் தண்டனை விதித்த நீதிமன்றம்

பெற்றோருடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, அவர்களுடைய 12 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கரும்புத் தோட்டத்தில் புதைத்த நபரை, இயற்கை மரணம் ஏற்படும் வரை சிறையில் அடைக்கும்படி விழுப்புரம் போச்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

விழுப்புரம் நீதிமன்றம்
News
விழுப்புரம் நீதிமன்றம்

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள கொண்டசமுத்திர பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். கூலித்தொழிலாளியான இவர், கடந்த 2016-ம் ஆண்டு அந்தப் பகுதி பெண் ஒருவரிடம் தவறாக நடக்க முயன்றாராம். இதை அந்தப் பெண், தன் கணவர் மூலமாகக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக முன்விரோதம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, அந்தப் பெண்ணைப் பழிவாங்கும் நோக்கத்துடன் இருந்துவந்தாராம் சேகர்.

சிறுமி பாலியல் வன்கொடுமை
சிறுமி பாலியல் வன்கொடுமை

இந்த நிலையில், 30.07.2016 அன்று அந்தப் பெண்ணின் கரும்புத் தோட்டத்தின் அருகே விளையாடிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணுடைய 12 வயது சிறுமியைத் தாக்கி, கரும்புத் தோட்டத்தினுள் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் சேகர். மேலும், அந்தச் சிறுமி அடையாளம் காண்பித்துவிட்டால் பிரச்னை ஆகிவிடுமோ என்பதற்காக, அருகில் கிடந்த கல்லைக் கொண்டு அந்தச் சிறுமியைப் பலமாகத் தாக்கி கொலைசெய்து, அங்கேயே பள்ளம் தோண்டி புதைத்திருக்கிறார்.

இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவுசெய்த திருவெண்ணைநல்லூர் போலீஸார், போக்ஸோ சட்டத்தின்கீழ் சேகரை கைதுசெய்தனர். இதற்கான வழக்கு விசாரணை விழுப்புரத்திலுள்ள போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட சேகருக்கு இயற்கையான மரணம் ஏற்படும் வரை சிறையில் அடைக்கும்படி அதிரடி தீர்ப்பு வழங்கியிருக்கிறார். 

சேகர்
சேகர்

மேலும், சேகருக்கு ரூ.10,000 அபராதமும், உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு அரசிடமிருந்து நிவாரணத் தொகையாக ரூ.10 லட்சம் வழங்கிடவும் உத்தரவிட்டிருக்கிறார். இதையடுத்து, போலீஸார் சேகரை கடலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.