Published:Updated:

விமானத்தில் பெண் பயணிமீது சிறுநீர் கழித்த விவகாரம்... பணிநீக்கம் செய்த அமெரிக்க நிறுவனம்!

பணிநீக்கம்
News
பணிநீக்கம்

அமெரிக்காவிலிருந்து வந்த விமானத்தில் பெண் பயணிமீது சிறுநீர் கழித்தவர், வேலையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:

விமானத்தில் பெண் பயணிமீது சிறுநீர் கழித்த விவகாரம்... பணிநீக்கம் செய்த அமெரிக்க நிறுவனம்!

அமெரிக்காவிலிருந்து வந்த விமானத்தில் பெண் பயணிமீது சிறுநீர் கழித்தவர், வேலையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

பணிநீக்கம்
News
பணிநீக்கம்

நியூயார்க்கிலிருந்து கடந்த நவம்பர் மாதம் 26-ம் தேதி டெல்லிக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த சங்கர் மிஸ்ரா என்பவர், தன்னருகில் அமர்ந்திருந்த வயதான பெண்மீது சிறுநீர் கழித்துவிட்டார். இந்தச் சம்பவம் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சம்பவம் நடந்தவுடன் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்ட மிஸ்ரா, இது குறித்து போலீஸில் புகார் செய்தால், அது தனது குடும்பத்தை பாதிக்கும் என்று கேட்டுக்கொண்டார். இந்தப் பிரச்னை விமானத்திலேயே பேசித் தீர்க்கப்பட்டுவிட்டது. ஆனால், கடந்த வாரம் இது குறித்து ஏர் இந்தியா நிர்வாகம் சங்கர் மிஸ்ரா மீது போலீஸில் புகார் செய்தது.

விமானத்தில் பெண் பயணிமீது சிறுநீர் கழித்த விவகாரம்... பணிநீக்கம் செய்த அமெரிக்க நிறுவனம்!

இது தொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்ட செய்தியில், ``பாதிக்கப்பட்ட பெண்ணின் விருப்பத்துக்கு மதிப்பளித்து விமானம் தரையிறங்கியவுடன் போலீஸார் அழைக்கப்படவில்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சங்கர் மிஸ்ரா ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய 30 நாள்களுக்குத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. இது போன்ற காரியத்தில் ஈடுபடும் பயணிகள்மீது விமானப் பணியாளர்கள் நடவடிக்கை எடுக்கத் தவறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் எச்சரித்திருக்கிறது.

அதோடு விமானத்தில் ஏதாவது ஒரு சம்பவம் நடந்து அந்தப் பிரச்னை விமானத்திலேயே தீர்க்கப்பட்டுவிட்டாலும்கூட, அது குறித்து விமானப் பணியாளர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்பல் வில்சன் உத்தரவிட்டிருக்கிறார்.

சங்கர் மிஸ்ரா மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருப்பதால் அவர் தலைமறைவாகிவிட்டார். மும்பையில் டெல்லி போலீஸார் மிஸ்ராவை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. சங்கர் மிஸ்ரா அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைத் தலைமையிடமாகக்கொண்ட வெல்ஸ் பார்கோ என்ற நிதி நிறுவனத்தின் இந்தியப் பிரிவில் துணைத் தலைவராக வேலை செய்துவருகிறார்.

சங்கர் மிஸ்ரா
சங்கர் மிஸ்ரா

விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்து சர்ச்சையில் சிக்கியதால் அவரைப் பணியிலிருந்து நீக்கி வெல்ஸ் பார்கோ நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிரது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``வெல்ஸ் பார்கோ நிர்வாக ஊழியர்கள் தொழில்முறை நடத்தையில் மிகவும் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர். தற்போது எழுந்திருக்கும் குற்றச்சாட்டு மிகவும் கவலையளிக்கிறது. எனவே, அவர் பணியிலிருந்து நீக்கப்படுகிறார்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.