Published:Updated:

சேலம்: பத்திரப்பதிவுக்கு லஞ்சம் பெற்ற சார்பதிவாளர்; மடக்கிப் பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை!

லஞ்சம்
News
லஞ்சம்

சேலத்தில் பத்திரப்பதிவுக்கு லஞ்சம் பெற்ற சார்பதிவாளரை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கையும் களவுமாகப் பிடித்தனர்.

Published:Updated:

சேலம்: பத்திரப்பதிவுக்கு லஞ்சம் பெற்ற சார்பதிவாளர்; மடக்கிப் பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை!

சேலத்தில் பத்திரப்பதிவுக்கு லஞ்சம் பெற்ற சார்பதிவாளரை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கையும் களவுமாகப் பிடித்தனர்.

லஞ்சம்
News
லஞ்சம்

சேலம், உடையாப்பட்டி ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்தில் தாதகாப்பட்டி சார்பதிவாளர் அலுவலகமும் அமைந்திருக்கிறது. இந்த அலுவலகத்தில் சார்பதிவாளராக செல்வபாண்டி என்பவர் பணியாற்றிவருகிறார்.

சேலம் தம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பழனிவேல். இவர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் மாநில செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். இவருடைய தாயார் பெயரில் கொழிஞ்சிப்பட்டி பகுதியில் 17 சென்ட் நிலம் இருக்கிறது. அந்த நிலத்தை தானசெட்டில்மென்ட் செய்வதற்காக, பத்திர எழுத்தர் கண்ணன் என்பவரை நாடியிருக்கிறார். அவரும், சார்பதிவாளர் செல்வபாண்டியனுடன் சம்பந்தப்பட்ட நிலம் அமைந்திருக்கும் பகுதிக்குச் சென்று பார்வையிட்டிருக்கின்றனர்.

கைது
கைது

பின்னர் அந்த நிலத்தைப் பார்வையிட்ட சார்பதிவாளர் செல்வபாண்டியன் `இந்த நிலத்தைப் பத்திரம் செய்துதர இயலாது' எனக் கூறியிருக்கிறார். பின்னர், பழனிவேல் சார்பதிவாளரை அலுவலகத்துக்குச் சென்று பார்த்திருக்கிறார்.

அப்போது அவர் சம்பந்தப்பட்ட பத்திர எழுத்தர் கண்ணனை சென்று பார்க்குமாறும், அவர் சொல்வதுபோல் செய்யுமாறும் கூறியிருக்கிறார். அதனால் பழனிவேலும் பத்திர எழுத்தர் கண்ணனைச் சென்று பார்த்திருக்கிறார். அப்போது அவர் `சார்பதிவாளருக்கு ரூ.50,000 கொடுத்தால்தான், அந்த நிலத்தைப் பத்திரம் செய்துதருவாராம். அதனால் பணத்தை தயார்செய்து எடுத்து வாருங்கள்' எனக் கூறியிருக்கிறார்.

இதனால் மன உளைச்சலுக்குள்ளான பழனிவேல் சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி கிருஷ்ணராஜிடம் புகாரளித்திருக்கிறார். அதன்மூலம் ரூ.50,000 பணத்தை தயார்செய்து அதில், ரசாயன பவுடர் தடவி பழனிவேலிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கொடுத்திருக்கின்றனர்.

அதை வாங்கிச் சென்ற பழனிவேல் பத்திர எழுத்தர் கண்ணனிடம் கொடுத்திருக்கிறார். அவர் அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டு, சார்பதிவாளருக்கு செல்போனில் அழைப்பு விடுத்திருக்கிறார். அப்போது சார்பதிவாளர் பணத்தை எடுத்துக்கொண்டு தன்னுடைய அலுவலகத்துக்கு வருமாறு தெரிவித்திருக்கிறார்.

பணம்
பணம்

இதையடுத்து, சார்பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்ற கண்ணன் ரூ.50,000 பணத்தை சார்பதிவாளர் செல்வபாண்டியனிடம் கொடுத்திருக்கிறார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கையும் களவுமாக சார்பதிவாளர் செல்வபாண்டியன், பத்திர எழுத்தர் கண்ணன் ஆகியோரைக் கைதுசெய்தனர்.