Published:Updated:

உராய்வு காரணமாக பட்டாசு ஆலையில் வெடி விபத்து; 3 தொழிலாளர்கள் பலி... சிவகாசியில் சோகம்!

சிவகாசி - வெடி விபத்து
News
சிவகாசி - வெடி விபத்து

சிவகாசி அருகேயுள்ள ஊராம்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:

உராய்வு காரணமாக பட்டாசு ஆலையில் வெடி விபத்து; 3 தொழிலாளர்கள் பலி... சிவகாசியில் சோகம்!

சிவகாசி அருகேயுள்ள ஊராம்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சிவகாசி - வெடி விபத்து
News
சிவகாசி - வெடி விபத்து

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் கடற்கரை. இவர் ஊராம்பட்டியில் பட்டாசு ஆலை நடத்திவருகிறார். இந்தப் பட்டாசு ஆலையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட அறைகள் இருக்கின்றன. இந்த ஆலையில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். தரைச்சக்கரம் தயாரிப்புக்கு மருந்து செலுத்திக்கொண்டிருக்கும்போது ஏற்பட்ட உராய்வின் காரணமாக, திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

பட்டாசு ஆலை வெடி விபத்து
பட்டாசு ஆலை வெடி விபத்து

இதில் அந்த அறையில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இருளாயி, அய்யம்மாள், குமரேசன், சுந்தர்ராஜ் ஆகிய நான்கு தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த சிவகாசி தீயணைப்புத்துறையினர், நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பிறகு பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.

தொடர்ந்து, படுகாயமடைந்த தொழிலாளர்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இதில் குமரேசன், சுந்தர்ராஜ், அய்யமாள் ஆகிய மூன்று தொழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த தொழிலாளர்களுக்குத் தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுவருகின்றன. இந்த வெடி விபத்து குறித்த புகாரின்பேரில், மாரனேரி போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.