Published:Updated:

சென்னை: சுடுகாட்டில் மது அருந்திய பெயின்டர்; சுற்றிவளைத்து கொலை வெறித் தாக்குதல் நடத்திய கும்பல்!

கொலை முயற்சி - கைது
News
கொலை முயற்சி - கைது

சுடுகாட்டில் மது அருந்திக்கொண்டிருந்த பெயின்டரை நான்கு பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியது. இது தொடர்பாகக் கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்த போலீஸார், மூன்று பேரைக் கைதுசெய்திருக்கிறார்கள்.

Published:Updated:

சென்னை: சுடுகாட்டில் மது அருந்திய பெயின்டர்; சுற்றிவளைத்து கொலை வெறித் தாக்குதல் நடத்திய கும்பல்!

சுடுகாட்டில் மது அருந்திக்கொண்டிருந்த பெயின்டரை நான்கு பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியது. இது தொடர்பாகக் கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்த போலீஸார், மூன்று பேரைக் கைதுசெய்திருக்கிறார்கள்.

கொலை முயற்சி - கைது
News
கொலை முயற்சி - கைது

சென்னை, பெருங்குடி, கல்லுக்குட்டை இந்திரா தெருவைச் சேர்ந்தவர் அருண் என்கிற சார்லஸ் (34). இவர் வேளச்சேரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், ``நான் பெயின்டிங் வேலை செய்துவருகிறேன். எனக்கு குடிப்பழக்கமும், கஞ்சா பழக்கமும் உண்டு. என்னிடம் எங்கள் தெருவில் வசிக்கும் சாய்ராம் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு பெயின்டிங் வேலைக்காக வந்தார். தற்போது அவர் சில பேரைச் சேர்த்துக்கொண்டு, தனியாக வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறார். நான் கூப்பிட்டால் சாய்ராம் வேலைக்கு வரமாட்டார். மற்றவர்களையும் என்னிடம் வேலைக்கு போகக் கூடாது என்று தடுத்துவந்தார். அதனால், நான் அவரிடம் `என்னைப் பகைத்துக்கொண்டால் அவ்வளவுதான்' என்று மிரட்டியிருந்தேன்.

சாய்ராம்
சாய்ராம்

இதனால் சாய்ராம் என்மீது கோபமாக இருந்தார். நானும் என்னுடைய நண்பன் ராஜி என்பவரும், 9.4.2023-ம் தேதியன்று மாலை மது வாங்கிக்கொண்டு, பாரதி நகர் சுடுகாட்டுக்குச் சென்று மது அருந்திக்கொண்டிருந்தோம். ராஜி, மாலை போட்டிருந்ததால் மது அருந்தவில்லை. நாங்கள் இருவரும் சுடுகாட்டில் இருப்பதைத் தெரிந்துகொண்டு சாய்ராம், யாகேஷ், சித்தேஷ், மணி பாரதி ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் என்னைச் சுற்றிவளைத்துக்கொண்டனர். அப்போது சாய்ராம், என்னுடைய வாயில் குத்தினார். அதனால் அங்கிருந்து தப்பிக்க, நாங்கள் இருவரும் சுடுகாட்டிலிருந்து வெளியே வந்தபோது, எங்களை மணி பாரதி, சித்தேஷ் ஆகியோர் தடுத்தனர்.

அப்போது யாகேஷ், கத்தியால் என்னுடைய இடது காலில் வெட்டினான். அதனால் நான் கீழே விழுந்துவிட்டேன். அப்போது அந்தக் கத்தியை யாகேஷிடமிருந்து வாங்கிய சாய்ராம், என் தலையில் வெட்டினான். ரத்த வெள்ளத்திலிருந்த நான், `காப்பாற்றுங்கள்’ என்று சத்தம் போட்டேன். அதனால் அந்த வழியாகச் சென்றவர்கள் என்னைக் காப்பாற்ற வந்தனர். அதைப் பார்த்த மணி பாரதியும், சித்தேஷும் அவர்கள்மீது கற்களை வீசினர். அப்போது என்னுடன் வந்த ராஜி, `விட்டுவிடுங்கள்' என்று சத்தம் போட்டார். அதனால், `நீ ஒழுங்கா ஓடிப்போய்விடு, இல்லையென்றால் உன்னையும் கொலை செய்துவிடுவோம்' என கத்தியைக் காட்டி மிரட்டியவர்கள், அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

யாகேஷ்
யாகேஷ்

இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் என்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். எனவே, என்னைத் தாக்கியவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆதவன் பாலாஜி, கொலை முயற்சி உட்பட ஆறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவந்தார். இந்த வழக்கில் சாய்ராம், யாகேஷ், சித்தேஷ் ஆகிய மூன்று பேரை போலீஸார் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து கத்தியை போலீஸார் பறிமுதல் செய்னர். தலைமறைவாக இருக்கும் மணி பாரதியை போலீஸார் தேடிவருகிறார்கள்.