Published:Updated:

பீர் பாட்டிலை உடைத்து போலீஸைக் கொல்ல முயன்ற ரெளடி - விசாரணைக்குச் சென்ற இடத்தில் நடந்த விபரீதம்

பீர் பாட்டிலால் போலீஸைத் தாக்க முயற்சி
News
பீர் பாட்டிலால் போலீஸைத் தாக்க முயற்சி

திருவள்ளூரில் ரௌடி ஒருவரைக் கைதுசெய்யும்போது பீர் பாட்டிலால் காவலர்களைத் தாக்க முயற்சிசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:

பீர் பாட்டிலை உடைத்து போலீஸைக் கொல்ல முயன்ற ரெளடி - விசாரணைக்குச் சென்ற இடத்தில் நடந்த விபரீதம்

திருவள்ளூரில் ரௌடி ஒருவரைக் கைதுசெய்யும்போது பீர் பாட்டிலால் காவலர்களைத் தாக்க முயற்சிசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பீர் பாட்டிலால் போலீஸைத் தாக்க முயற்சி
News
பீர் பாட்டிலால் போலீஸைத் தாக்க முயற்சி

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திகுப்பம் பகுதியில் இலங்கை அகதிகள் மறுவாழ்வு மையம் இருக்கிறது. இந்தப் பகுதியிலுள்ள வட்டாட்சியர் அலுவலகம் அருகே மூடப்பட்ட நிலையில் ஒரு தனியார் தொழிற்சாலை இருக்கிறது. இந்தத் தொழிற்சாலையிலுள்ள பழைய இரும்புகளைத் திருட சிலர் தொழிற்சாலைக்கு உள்ளே வந்திருக்கிறார்கள்.

பீர் பாட்டிலால் போலீஸைத் தாக்க முயற்சி
பீர் பாட்டிலால் போலீஸைத் தாக்க முயற்சி

அப்போது, அந்தத் தொழிற்சாலையில் பாதுகாப்புப் பணியிலிருந்த வழுதலம் பேடு கிராமத்தைச் சேர்ந்த முத்து என்பவர் அவர்களைத் தட்டிக்கேட்டிருக்கிறார். இதில் ஆத்திரமடைந்த நபர்கள் காவலாளி முத்துவைக் கல்லால் தாக்கியிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து, காவலாளி கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார்.

விசாரணையில் காவலாளி முத்துவைத் தாக்கியது அந்த முகாமில் வசிக்கும் பிரபல ரௌடி ராபின்சன் என்பது தெரியவந்தது. ராபின்சன் மீது ஏற்கெனவே திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அகதிகள் மறுவாழ்வு மையத்துக்கு விரைந்த போலீஸார் ராபின்சனைப் பிடிக்க முயற்சிசெய்தனர்.

பீர் பாட்டிலால் போலீஸைத் தாக்க முயற்சி
பீர் பாட்டிலால் போலீஸைத் தாக்க முயற்சி

அப்போது, ராபின்சன் ஒரு பீர் பாட்டிலை எடுத்து உடைத்து, கும்மிடிப்பூண்டி சிப்காட் இன்ஸ்பெக்டர் சுரேஷ், தனிப்பிரிவு காவலர் ராமதாஸ் ஆகியோரைத் தாக்கி கொலைசெய்ய முயற்சிசெய்தார். மேலும், காவலர்களின் கவனத்தைத் திசைதிருப்பிவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடியிருக்கிறார். தலைமறைவாக இருந்த ராபின்சனைத் தீவிர தேடுதலுக்குப் பிறகு போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். இந்த நிலையில், ரௌடி ஒருவர் உடைந்த பீர் பாட்டிலைக்கொண்டு காவலர்களைத் தாக்க முயற்சிசெய்யும் வீடியோ இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது.