Published:Updated:

ரயில் தீவைப்பு விவகாரம்: ஷாருக் சைஃபிக்கு பயங்கரவாதத் தொடர்பு?! - விசாரணைக்குத் தயாராகும் என்.ஐ.ஏ

தீவைக்கப்பட்ட ரயில்
News
தீவைக்கப்பட்ட ரயில்

ரயிலிலிருந்து யாரையும் தள்ளிவிடவில்லை என ஷாருக் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. விசாரணை நடத்தும்போது ஷாருக் சைஃபி தனக்கு உடல்நலக்குறைவு இருப்பதாக போலீஸிடம் தொடர்ந்து சொல்லிகொண்டிருந்தார்.

Published:Updated:

ரயில் தீவைப்பு விவகாரம்: ஷாருக் சைஃபிக்கு பயங்கரவாதத் தொடர்பு?! - விசாரணைக்குத் தயாராகும் என்.ஐ.ஏ

ரயிலிலிருந்து யாரையும் தள்ளிவிடவில்லை என ஷாருக் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. விசாரணை நடத்தும்போது ஷாருக் சைஃபி தனக்கு உடல்நலக்குறைவு இருப்பதாக போலீஸிடம் தொடர்ந்து சொல்லிகொண்டிருந்தார்.

தீவைக்கப்பட்ட ரயில்
News
தீவைக்கப்பட்ட ரயில்

கேரள மாநிலம் கோழிக்கோடு எலத்தூரில் ஓடும் ரயிலில் பயணிகள்மீது கடந்த 2-ம் தேதி பெட்ரோல் ஊற்றி தீவைத்த சம்பவம் நாட்டை உலுக்கியது. இந்தச் சம்பவத்தில் மூன்று பேர் உடல் ரயில் தண்டவாளத்திலிருந்து மீட்கப்பட்டன. அவர்கள் தீயிலிருந்து தப்பிக்க ரயிலிலிருந்து குதித்தார்களா, அல்லது தள்ளிவிடப்பட்டார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டிருக்கும் ஷாருக் சைஃபியை 11 நாள் காவலில் எடுத்து போலீஸ் விசாரணை நடத்திவருகிறது. ஷாருக் சைஃபியிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. டெல்லியிலிருந்து சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸில் கேரளா வந்திருப்பதாக ஷாருக் சைஃபி வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கிறார். அது உண்மைதானா என்பதை உறுதிப்படுத்த புதுடெல்லி ரயில் நிலையத்திலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை விசாரணைக்குழு சேகரித்து, ஆய்வு செய்துவருகிறது. மேலும், கேரளத்தின் சொர்னூர் வந்த அவர் ரயில் நிலையத்தில் இறங்கி ஆட்டோ பிடித்து ஒன்றரை கிலோமீட்டர் தூரம் சென்று ஒரு பெட்ரோல் பங்கில் பாட்டில்களில் பெட்ரோல் வாங்கியிருக்கிறார். சொர்னூர் ரயில் நிலையம் அருகே பெட்ரோல் பங்க் இருந்தும் அவர் அவுட்டரில் சென்று பெட்ரோல் வாங்கியிருக்கிறார்.

ஷாருக் ஷைப்
ஷாருக் ஷைப்

ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட பேக் ஷாருக் சைஃபிக்குச் சொந்தமானது எனவும், டைரியில் இருப்பது அவரது கையெழுத்து எனவும் தெரியவந்திருக்கிறது. ரயிலிலிருந்து தப்பிச்செல்லும்போது பேக் தவறி விழுந்திருப்பதாக ஷாருக் தெரிவித்திருக்கிறார். அதே சமயம் ரயிலிலிருந்து யாரையும் தள்ளிவிடவில்லை என ஷாருக் தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. நேற்று விசாரணை நடத்தும்போது ஷாருக் சைஃப் தனக்கு உடல்நலக்குறைவு இருப்பதாக போலீஸிடம் தொடர்ந்து சொல்லிகொண்டிருந்தார். இதையடுத்து, அவரை ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், `ஷாருக் சைஃப்புக்கு உடலில் எந்தப் பிரச்னையும் இல்லை’ எனத் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ஷாருக் சைஃப் தனது செல்போனில் கடைசியாக அழைத்த எண்களை போலீஸார் ஆய்வுசெய்தனர். அவை அனைத்தும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில், ஷாருக் சைஃப்புக்கு பயங்கரவாத தொடர்பு இல்லை எனக் கூறிவிட முடியாது என என்.ஐ.ஏ-வின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. எனவே, ஷாருக் சைஃபியின் பயங்கரவாதத் தொடர்பு குறித்து என்.ஐ.ஏ விசாரணை நடத்திவருகிறது.

ஷாருக் சைஃப்பிடம் விசாரணை
ஷாருக் சைஃப்பிடம் விசாரணை

தாக்குதலுக்கு கேரளா மாநிலத்தைத் தேர்ந்தெடுத்தது ஏன் என்ற கேள்விக்கு விடைதேடுகிறது போலீஸ். எலத்தூர் பகுதியில் ஹிந்துஸ்தான் பெட்ரோலின் டெப்போ ஒன்று இருக்கிறது. அதன்மூலம் பெரும் விபத்து எற்படுத்த திட்டமிடப்பட்டதா, பாலத்தின்மீது ரயில் செல்லும் சமயத்தில் தீவைக்கப்பட்டிருப்பதன் பின்னணியிலும் பெரிய சதித்திட்டம் இருக்கிறதா எனவும் விசாரிக்க என்.ஐ.ஏ தீர்மானித்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஷாருக் மீது யு.ஏ.பி வழக்கு பாய்ந்தால், இந்த வழக்கை என்.ஐ.ஏ கையில் எடுத்து விசாரிக்க வாய்ப்பிருக்கிறது எனக் கூறப்படுகிறது.