Published:Updated:

அமெரிக்கா: குருத்வாராவில் துப்பாக்கிச்சூடு; இருவர் படுகாயம் - தீவிர விசாரணையில் போலீஸ்!

அமெரிக்க குருத்வாரா
News
அமெரிக்க குருத்வாரா

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள குருத்வாராவுக்கு வெளியே நடந்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயமடைந்தனர்.

Published:Updated:

அமெரிக்கா: குருத்வாராவில் துப்பாக்கிச்சூடு; இருவர் படுகாயம் - தீவிர விசாரணையில் போலீஸ்!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள குருத்வாராவுக்கு வெளியே நடந்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயமடைந்தனர்.

அமெரிக்க குருத்வாரா
News
அமெரிக்க குருத்வாரா

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், சாக்ரமென்டோ கவுன்டியிலுள்ள குருத்வாராவில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கீர்த்தனை விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் நூற்றுக்கணக்காக சீக்கியர்கள் கலந்துகொண்டனர். அப்போது இரு நபர்களுக்கு மத்தியில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அது சண்டையாக மாறி, இருவரும் மாறி மாறி சுட்டுக்கொண்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிகழ்வு குறித்துப் பேசிய சாக்ரமென்டோ கவுன்டி ஷெரிப் அலுவலகச் செய்தித் தொடர்பாளர் சார்ஜென்ட் (Sacramento County Sheriff’s Office spokesman Sgt. Amar Gandhi), "குருத்வாரா கோயில் வளாகத்தில் இரு ஆண்களுக்கிடையே சண்டை ஏற்பட்டிருக்கிறது. அது துப்பாக்கிச்சூடு வரை சென்றிருக்கிறது. இதில், ஒருவரை ஒருவர் மாறி மாறி சுட்டுக்கொண்டனர். சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். தவறிழைத்தவர்களுக்கு உரிய தண்டனை கொடுக்கப்படும்" எனத் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து பேசிய காவல்துறை, "துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயமடைந்திருக்கின்றனர். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தச் சம்பவம் தனிப்பட்ட இருவரின் சண்டையால் ஏற்பட்டிருக்கிறது என முதல்கட்ட தகவலில் தெரியவந்திருக்கிறது. எனவே, இந்தச் சம்பவத்துக்கு வெறுப்புணர்ச்சி காரணமல்ல என்பதும் தெரியவந்திருக்கிறது" என விளக்கமளித்திருக்கிறது.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்கள்
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்கள்

இந்த விவகாரம் குறித்து பேசிய அமெரிக்க வாழ் சீக்கிய சமூகம், "நகர் கீர்த்தனை அணிவகுப்பைச் சிதைக்க, சிலர் முயன்றது துரதிர்ஷ்டவசமானது. குற்றவாளி முழுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்" எனத் தெரிவித்திருக்கிறது.