Published:Updated:

'ரூ.5,000 கொடுக்கலைன்னா, துரும்பும் அசையாது!' - லஞ்சம் கேட்ட ஃபோர்மேனை, போலீஸில் சிக்கவைத்த விவசாயி

குளித்தலை
News
குளித்தலை

மின்சார இணைப்பு வழங்குவதற்கு லஞ்சம் கேட்ட ஃபோர்மேனை லஞ்ச ஒழிப்பு போலீஸார், கையும் களவுமாகக் கைதுசெய்தனர்.

Published:Updated:

'ரூ.5,000 கொடுக்கலைன்னா, துரும்பும் அசையாது!' - லஞ்சம் கேட்ட ஃபோர்மேனை, போலீஸில் சிக்கவைத்த விவசாயி

மின்சார இணைப்பு வழங்குவதற்கு லஞ்சம் கேட்ட ஃபோர்மேனை லஞ்ச ஒழிப்பு போலீஸார், கையும் களவுமாகக் கைதுசெய்தனர்.

குளித்தலை
News
குளித்தலை

கரூர் மாவட்டம், குளித்தலை அருகேயுள்ள ஒட்டப்பட்டியைச் சேர்ந்தவர் தங்கராசு. விவசாயியான இவர், தனக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்துவருகிறார். இந்த நிலையில், தண்ணீர்த் தேவைக்காக இவர் 2010-ம் ஆண்டு ரூ.50,000 திட்டத்தின் கீழ், தனது விவசாயத் தோட்டத்துக்கு மின் இணைப்பு வேண்டி விண்ணப்பம் செய்திருந்தார். இதில், அவருக்கு 2021-ம் ஆண்டு ரூ.50,000 திட்டத்தின் மின் இணைப்புக்கு பதிலாக, இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

சேகர்
சேகர்

இதனால் மகிழ்ந்த அவரிடம், இந்த இலவச மின் இணைப்பைப் பெறுவதற்காக கொசூர் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றிவரும் ஃபோர்மேன் சேகர் என்பவர் ரூ.5,000 லஞ்சமாகக் கேட்டிருக்கிறார். இதனால், தங்கராசு அதிர்ச்சியடைந்திருக்கிறார். ஆனால் சேகரோ, "லஞ்சம் கொடுக்கலைன்னா, துரும்பும் நகராது. தோட்டத்துக்கு மின்சார கனெக்சன் வேணும்னா, ரூ.5,000 எடுத்து வை' என்று ஸ்ட்ரிக்டாகக் கேட்டிருக்கிறார்.

ஆனால், ஃபோர்மேன் சேகருக்கு லஞ்சம் தர விரும்பாத தங்கராசு, இது குறித்து கரூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகாரளித்திருக்கிறார். அதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறையினரின் வழிகாட்டுதல்படி, மின்வாரிய அலுவலகத்துக்குச் சென்ற தங்கராசு, ஃபோர்மேன் சேகரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரசாயனம் தடவிக் கொடுத்த ரூ.5,000 ரூபாய் நோட்டுகளை அளித்தார்.

கைது
கைது

அப்போது, வெளியே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி நடராஜன், ஆய்வாளர் தங்கமணி ஆகியோர் அடங்கிய டீம், விவசாயியிடம் லஞ்சம் பெற்ற ஃபோர்மேன் சேகரை கையும் களவுமாகப் பிடித்துக் கைதுசெய்தது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர், ஃபோர்மேன் சேகரிடம் கொசூர் மின்வாரிய அலுவலகத்திலேயே வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து, சேகர் மீது வழக்கு பதிவுசெய்து, அவரைச் சிறையிலடைத்தனர்.