Published:Updated:

`அதிகாரிகளின் பேராசையே காரணம்’ - சிறையில் எம்.எல்.ஏ-வுடன் தங்கிய மனைவியை மடக்கிய பெண் போலீஸ் அதிகாரி

அப்பாஸ் அன்சாரி
News
அப்பாஸ் அன்சாரி

உத்தரப்பிரதேசத்தில் சிறையில் தன் எம்.எல்.ஏ கணவருடன் சட்டவிரோதமாகத் தங்கி வந்த பெண்ணை, பெண் போலீஸ் அதிகாரி பிருந்தா சுக்லா ரகசியமாகச் சென்று மடக்கிப் பிடித்தார். ரெய்டுக்கு சீருடையில் செல்லாமல் சாதாரண ஆடையில் சென்றார்; சாட்சியாக மாவட்ட நீதிபதியையும் அழைத்துச் சென்றார்.

Published:Updated:

`அதிகாரிகளின் பேராசையே காரணம்’ - சிறையில் எம்.எல்.ஏ-வுடன் தங்கிய மனைவியை மடக்கிய பெண் போலீஸ் அதிகாரி

உத்தரப்பிரதேசத்தில் சிறையில் தன் எம்.எல்.ஏ கணவருடன் சட்டவிரோதமாகத் தங்கி வந்த பெண்ணை, பெண் போலீஸ் அதிகாரி பிருந்தா சுக்லா ரகசியமாகச் சென்று மடக்கிப் பிடித்தார். ரெய்டுக்கு சீருடையில் செல்லாமல் சாதாரண ஆடையில் சென்றார்; சாட்சியாக மாவட்ட நீதிபதியையும் அழைத்துச் சென்றார்.

அப்பாஸ் அன்சாரி
News
அப்பாஸ் அன்சாரி

உத்தரப்பிரதேச மாநிலம், சித்ரகூட் பகுதியைச் சேர்ந்த அப்பாஸ் அன்சாரி என்ற எம்.எல்.ஏ கிரிமினல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். அப்பாஸ் அன்சாரியின் தந்தை முக்தார் அன்சாரியும் பிரபல கிரிமினல். முக்தார் குடும்பமே கடந்த பல ஆண்டுகளாக உத்தரப்பிரதேசம் முழுக்க குற்றச்செயலில் ஈடுபட்டு வருகிறது. சிறையில் இருந்து கொண்டே அப்பாஸ் அன்சாரி குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், சித்ரகூட்டுக்கு மாவட்ட கண்காணிப்பாளராக வந்த பிருந்தா சுக்லா என்ற பெண் போலீஸ் அதிகாரி, முக்தார் அப்பாஸ் குடும்பத்தின் மீது கண் வைத்திருந்தார். சிறையில் இருக்கும் அப்பாஸ் அன்சாரியை அவரின் மனைவி நிக்கட் பானு அடிக்கடி ரகசியமாக வந்து சந்தித்துவிட்டு சென்றார். அடிக்கடி சிறையிலேயே சட்டவிரோதமாகத் தன் கணவருடன் தங்கி இருந்தார். இது குறித்து போலீஸ் அதிகாரி பிருந்தா சுக்லாவுக்கு தெரிய வந்தது. அப்பாஸ் அன்சாரி மனைவி சிறைக்கு வந்து செல்ல சிறை அதிகாரி தேவையான உதவிகளைச் செய்து வந்தார்.

பிருந்தா சுக்லா
பிருந்தா சுக்லா

அதோடு நிக்கத் பானு சிறைக்கு வந்து செல்வது சிறை பதிவேடுகளில் பதிவு செய்யப்படுவதில்லை. இதையடுத்து அன்சாரியையும் அவரின் மனைவியையும் கையும் களவுமாக பிடிக்க சுக்லா திட்டம் தீட்டினார். இதற்கு சரியான நேரத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். அப்பாஸ் அன்சாரி பாரதிய சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏ-வாக இருப்பதால் சரியான ஆதாரத்துடன் பிடிக்கத் திட்டமிட்டு இருந்தார். சுக்லா எதிர்பார்த்தது போல் சிறையில் பானு தன் கணவருடன் இருப்பது தெரிய வந்தது. ஆனால், அவர் பல மணி நேரமாகியும் வெளியில் செல்லவில்லை. இது குறித்து உறுதியான தகவல் கிடைத்தவுடன் மாவட்ட நீதிபதியை அழைத்துக்கொண்டு சிறைக்கு ரெய்டுக்கு சென்றார் சுக்லா.

ரெய்டுக்குச் சென்றபோது யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அரசின் அதிகாரபூர்வ வாகனத்தில் செல்லாமல் தனியார் வாகனத்தில் சென்றார். அதோடு போலீஸ் சீருடையில் செல்லாமல் சாதாரண ஆடையில் சென்றார். ரெய்டுக்கு சாட்சி வேண்டும் என்பதற்காக மாவட்ட நீதிபதியையும் அழைத்துச் சென்றார்.

சிறையில் அப்பாஸ் அன்சாரி அடைக்கப்பட்டு இருந்த அறையை சோதனை செய்து பார்த்தபோது அங்கு அவர் இல்லை. இதையடுத்து சிறையில் இருக்கும் அனைத்து அறைகளும் சோதனை செய்யப்பட்டன. ஆனாலும், எங்கும் அன்சாரி கிடைக்கவில்லை. அப்போது, சிறை அதிகாரி அசோக் சாகர் அறைக்கு அருகில் இருந்த ஓர் அறையைப் பார்த்தபோது அது உள்பக்கமாக அடைக்கப்பட்டு இருந்தது. அந்த அறையை திறக்கச் சொல்லி பார்த்தபோது உள்ளே அப்பாஸ் அன்சாரியும் அவரின் மனைவி நிக்கத் பானும் இருந்தனர்.

நிக்கத் பானுவிடமிருந்து இரண்டு மொபைல் போன், பணம், வெளிநாட்டு கரன்சி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் பல நாள்களாக இந்த அறையில் இருவரும் குடும்பம் நடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து நிக்கத் பானு கைது செய்யப்பட்டார்.

அப்பாஸ் அன்சாரி, மனைவி நிக்கத் பானு
அப்பாஸ் அன்சாரி, மனைவி நிக்கத் பானு

இது குறித்து போலீஸ் அதிகாரி பிருந்தா சுக்லா கூறுகையில், ``சில நாள்களாக சிறையில் சட்டவிரோதச் செயல்கள் நடப்பதாகவும், வெளியில் இருந்து செல்பவர்கள் சட்டவிரோதமாக கைதிகளை சந்திப்பதாகவும் எங்களுக்குத் தகவல் கிடைத்தது. நானும், மாவட்ட நீதிபதியும் சிறையில் ரெய்டு நடத்தினோம். இதில் அப்பாஸ் அன்சாரி அவரது அறையில் இல்லை. அவர்கள் இரண்டு பேரையும் தனியாகச் சந்தித்துப் பேச அனுமதித்திருந்தனர். ஆனால், நிக்கத்தின் வருகை சிறை பதிவேட்டில் இடம்பெறவில்லை. அவர்கள் இருவரும் சிறை அலுவலக அறையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது’’ என்று தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது குறித்து பிருந்தா சுக்லா, ``சட்டவிரோதமான இந்த சந்திப்பை அனுமதித்தற்குக் காரணம் பெரிய தொகைக்கும், ஆடம்பர பரிசுகளுக்குமான பேராசை. இந்தக் குற்றம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 8 ஜெயில் அதிகாரிகளின் வீட்டில் இருந்து 6 லட்சம் பணமும், ஒரு கார், இரண்டு மொபைல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பிருந்தா சுக்லா முதன்முறையாக சித்ரகூட் மாவட்ட காவல்துறை அதிகாரியாகப் பதவியேற்றுள்ளார். பதவியேற்றவுடன் அப்பாஸ் அன்சாரி மீது நடவடிக்கை எடுத்திருப்பதைப் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.