Published:Updated:

திருவண்ணாமலை: குடும்பப் பிரச்னையை விசாரிக்க 3,000 லஞ்சம்; பெண் எஸ்.ஐ விஜிலன்சில் சிக்கியது எப்படி?

லஞ்சம்: பெண் எஸ்.ஐ கைது
News
லஞ்சம்: பெண் எஸ்.ஐ கைது

குடும்பப் பிரச்னை விசாரணையின்போது, ரூ.3,000 லஞ்சம் கேட்ட பெண் எஸ்.ஐ., லஞ்ச ஒழிப்புத்துத்துறை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:

திருவண்ணாமலை: குடும்பப் பிரச்னையை விசாரிக்க 3,000 லஞ்சம்; பெண் எஸ்.ஐ விஜிலன்சில் சிக்கியது எப்படி?

குடும்பப் பிரச்னை விசாரணையின்போது, ரூ.3,000 லஞ்சம் கேட்ட பெண் எஸ்.ஐ., லஞ்ச ஒழிப்புத்துத்துறை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

லஞ்சம்: பெண் எஸ்.ஐ கைது
News
லஞ்சம்: பெண் எஸ்.ஐ கைது

திருவண்ணாமலை மாவட்டம், கீழ் பளனந்தல் மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிவேல். இவருக்குத் திருமணமாகி, மனைவி, இரண்டு மகன்கள் இருக்கின்றனர். வெற்றிவேலின் வீட்டுக்கு அவ்வப்போது அவருடைய சகோதரிகள் வந்து செல்வார்களாம். இது வெற்றிவேலின் மனைவி ராணிக்கு (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) பிடிக்காமல் போயிருக்கிறது. இதனால் கணவன் மனைவிக்கிடையே கடந்த டிசம்பர் (2022) மாதம் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. உடனே கோபித்துக்கொண்ட ராணி, சென்னை பூந்தமல்லியிலுள்ள தனது சகோதரர் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.

லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை - திருவண்ணாமலை
லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை - திருவண்ணாமலை

இந்த நிலையில், கடந்த 9-ம் தேதி திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வெற்றிவேல் மீது ராணி புகார் ஒன்று அளித்திருக்கிறார். அந்தப் புகாரைப் பெற்ற மகளிர் போலீஸார், 11-ம் தேதி வெற்றிவேலைத் தொடர்புகொண்டு விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்திருக்கின்றனர். அவரிடம் விசாரணை மேற்கொண்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பரமேஸ்வரி, எழுத்துபூர்வமான பதிலை அறிக்கையாக எழுதி வாங்கிக்கொண்டிருக்கிறார். மேலும், 'காவல் நிலைய செலவுக்காக 3,000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும்' என வெற்றிவேலிடம் கேட்டாராம்.

குடும்பப் பிரச்னை, போலீஸ் விசாரணை என மனஉளைச்சலில் இருந்த வெற்றிவேல், போலீஸுக்கு லஞ்சம் தர விருப்பமில்லாமல், திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி வேல்முருகனிடம் 12-ம் தேதி புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார். இது தொடர்பாக ரகசிய விசாரணை செய்து, வழக்கு பதிவுசெய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், நேற்று காலை (13.05.2023) சிறப்பு உதவி ஆய்வாளர் பரமேஸ்வரி பணியில் இருக்கும்போது, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வெற்றிவேலிடம் கொடுத்தனுப்பியிருக்கின்றனர்.  

திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்
திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்

பரமேஸ்வரி அந்த ரூபாய் நோட்டுகளைப் பெறும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், அவரைக் கையும் களவுமாகப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். குடும்பப் பிரச்னையை விசாரிக்க லஞ்சம் கேட்டுப்பெற்ற பெண் எஸ்.ஐ-யை, காவல் நிலையத்திலேயே வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், கைதுசெய்த சம்பவம் திருவண்ணாமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.